Posted by Haja Mohideen
(Hajas) on 10/15/2009
|
|||
பாளை.யில் ஹஜ் பயணிகளுக்கு தடுப்பு ஊசி முகாம்
பாளையங்கோட்டையில் ஹஜ் பயணிகளுக்கு தடுப்பு ஊசி முகாம் நேற்று நடந்தது. ஹஜ் பயணம் முஸ்லிம்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு முஸ்லிம்கள் புனித ஹஜ் பயணம் ஆண்டு தோறும் மேற்கொண்டு வருகிறார்கள். உலக முழுவதும் உள்ள லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்கா நகருக்கு செல்கிறார்கள். அதுபோல் இந்த ஆண்டும் இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள். தமிழகத்தில் இருந்தும் முஸ்லிம்கள் ஹஜ் பயணம் செல்கிறார்கள். தடுப்பு ஊசி முகாம் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு நேற்று பாளையங்கோட்டை முஸ்லிம் அனாதை நிலையத்தில் தடுப்பு ஊசி முகாம் நடந்தது. முகாமுக்கு சுகாதார பணிகள் துணை இயக்குனர் (பொறுப்பு) கிருஷ்ண லீலா தலைமை தாங்கினார். அவர் தலைமையில் டாக்டர்கள் ஹஜ் பயணிகளுக்கு தடுப்பு ஊசி போட்டனர். முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி போடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹஜ் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் சாகுல் அமீது செய்து இருந்தனர். http://www.dailythanthi.com/article.asp?NewsID=520421&disdate=10/15/2009&advt=2 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |