Posted by Haja Mohideen
(Hajas) on 10/16/2009
|
|||
நாங்குநேரி அருகே பைபாஸ் ரோட்டில் மணல் லாரி கவிழ்ந்து நொறுங்கியது. இந்த விபத்தில் டிரைவர்- கிளீனர் காயத்துடன் உயிர் தப்பினர். விபத்து பற்றிய விவரம் வருமாறு:- மணல் லாரி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு மணல் லாரி ஒன்று கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை நோக்கி புறப்பட்டது. லாரியை நாகர்கோவில் கண்ணங்குளத்தைச் சேர்ந்த தங்கச்சாமி நாடார் மகன் ராமகிருஷ்ணன் (வயது 30) என்பவர் ஓட்டி சென்றார். ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த ஆபிரகாம் மகன் ஜோஸ் (26) என்பவரும் உடன் இருந்தார். லாரி நெல்லை- கன்னியாகுமரி பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. நாங்குநேரி நம்பிநகரில் ஒரு வளைவில் திரும்பும் போது நிலை தடுமாறி அருகில் இருந்த சிறிய பாலத்தில் மோதியது. உயிர் தப்பினர் இரண்டு சாலைகளுக்கு இடையே உள்ள பாலத்துக்குள் டமார் என்ற பயங்கர சத்தத்துடன் விழுந்து நொறுங்கியது. இதில் லாரியின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. லாரி டிரைவர் ராமகிருஷ்ணன், ஜோஸ் ஆகிய இருவரும் விபத்துக்குள்ளான லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடியபடி கிடந்தனர். தகவல் அறிந்தவுடன் நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லக்கண்ணு, சப்-இன்ஸ்பெக்டர் திரவியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடி கொண்டிருந்த ராமகிருஷ்ணன், ஜோஸ் ஆகிய இருவரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து நாங்குநேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |