Posted by Kashif
(sohailmamooty) on 10/21/2009
|
|||
நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனின் மனிதநேயம்! சிதம்பரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க வாழ் அறிவியல் மேதை வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் இந்த ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு பெறுவோரில் ஒருவராக அறிவிக்கப் பட்டவுடன் உலகச் செய்தி ஊடகங்களில் அவரைப் பற்றிய செய்திகள் உலாவரத் தொடங்கின. இந்தியாவிற்கு அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கு அறிவியல் மேதை ராம கிருஷ்ணனால் மிகுந்த பெருமிதம். 57 வயதாகும் ராமகிருஷ்ணன் நோபல் பரிசு பெறும் 7வது இந்தியர் ஆவார். சிதம்பரத்தில் பிறந்திருந்தாலும், மிகச் சிறிய வயதிலேயே குஜராத்திற்கு குடிய பெயர்ந்து தனது பட்டப்படிப்பை பரோடா பல்கலைக்கழகத்தில் முடித் தார். பிறகு அமெரிக்கா சென்று ஒஹியோ பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி. டாக்டர் பட்டம் பெற்று, கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியில் இணைந் தார். செல்களில் உள்ள ரிபோசோம்கள் பற்றிய ஆய்வுக்காக வேதியலுக்கான நோபல் பரிசு பெற்றுள்ள இவரின் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, டாக்டர் பட்ட ஆய்வு ஆகியவை இயற்பியல் துறை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனின் சாதனைக்காக இந்தியத் தலைவர்களும், குடி மக்களும் அவரே திக்குமுக்காடி திணறும் அளவுக்கு வாழ்த்தி மகிழ்ந்துள்ளனர். ஓர் அறிவியல் மேதையாக அகில அறிமுகம் பெற்ற வெங்கட்ராமன் ராம கிருஷ்ணனின் மனிதநேய மனத்தை அவரது சகாவும் ஓய்வுபெற்ற அணுக்கரு இயற்பியல் துறை பேராசிரியருமான ஜே.எஸ்.பண்டுக்வாலா வெளிப்படுத்தியுள் ளார். வெங்கி என்று செல்லமாக அழைக் கப்படும் டாக்டர் வெங்கட்ராமன் ராம கிருஷ்ணன், சிறு வயது முதலே குஜராத் மாநிலம் வடோதராவில் வளர்ந்தவர். இவரது தந்தையார் வெங்கட்ராமன் மஹா ராஜா சாயஜிரங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், தாயார் ராஜலஷ்மியும் குழந்தை உணவூட்டம் மற்றும் உயிர் வேதியல் துறையில் பேராசிரியர். பெற்றோர் இருவரும் பேராசிரியர்கள். எனவே இவரையும், இவரது சகோ தரியையும் வளர்த்த வேலைக்கார அம் மையார் மீது இவருக்கு பாசம் அதிகம். அவருடைய குடும்பத்தை இவர் இன்றும் பரிவோடு கவனித்து வருகிறார். 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் சங்பரிவார மதவெறியர்கள் மூட்டிய கலவர நெருப்பு கொழுந்துவிட்டு எரிந் தது. வடோதராவில் இருந்த பெஸ்ட் பேக்கரியில் 12 முஸ்லிம்கள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். பேராசிரியர் பண்டுக் வாலாவின் வீடும் சூறையாடப்பட்டது. இதை அறிந்து மிகவும் வருந்திய டாக் டர் ராமகிருஷ்ணன், தனது நண்பர் பண் டுக்வாலா மூலம், வறுமையில் வாடும் முஸ்லிம் சிறுவர்லிசிறுமிகளின் கல்வி தடைபடாமல் தொடர நிதியுதவி செய்து வருகிறார். பணம் கொடுத்தோம், கடமை தீர்ந் தது என்று இல்லாமல், அடிக்கடி ஏழை முஸ்லிம் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை விசாரித்து அறிவாராம். குறிப்பாக கணிதம், இயற்பியல், வேதியல் பாடங்களில் அவர்களுக்கு ஆர்வ மூட்டுமாறு பேராசிரியர் பண்டுக்வாலாவிடம் கேட்டுக் கொள்வாராம். சிதம்பரத்தில், பிராமண குடும்பத்தில் பிறந்து, குஜராத்திற்கு குடிபெயர்ந்து பின்னர் அமெரிக்காவில் கல்வி பயின்று, அந்நாட்டின் நிரந்தரக் குடியுரிமையையும் பெற்றுள்ள டாக்டர் ராமகிருஷ்ணன், குஜராத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அக்கறை செலுத்துவதும், முஸ்லிம் சிறார்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவுவதும் பாராட்டிற்குரியது. மனிதன் அறிவாளியாவது எளிது, அறிவாளி மனிதநேயத்தோடு திகழ்வது தான் அரிதினும் அரிது. நோபல் பரிசு பெற்றுள்ள டாக்டர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அறி வாலும், மனிதநேயத்தாலும் உயர்ந்து நிற்பது வாழ்த்திற்குரியது. நன்றி: தி ஹிந்து (8.10.09) |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |