Posted by S.i.sulthan
(sisulthan) on 10/25/2009
|
|||
ஏர்வாடியில் ஆட்டோவில் தனியாக சென்ற இளம்பெண்னை கழுத்தை நெரித்து கொலை செய்து 5 பவுன் தங்க செயினை பறித்து சென்ற ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். ஏர்வாடி அருகேயுள்ள கோதைசேரியை சேர்ந்த சுப்பையா மனைவி பாலசரஸ்வதி(27). இவர் நேற்று முன்தினம் மாலையில் தளபதிசமுத்திரம் கீழுரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பின் அங்கிருந்து புறப்பட்டு பஸ்சில் வள்ளியூர் போய் ஏர்வாடிக்கு இரவு 9 மணிக்கு வந்துள்ளார். அப்போது கோதைசேரி செல்ல பஸ் இல்லாததால் ஊருக்கு செல்ல பாலசரஸ்வதி ஆட்டோ பிடித்து சென்றுள்ளார். ஆனால் வீட்டிற்கு வெகுநேரமாகியும் பாலசரஸ்வதி வராததால் சுப்பையா தளபதிசமுத்திரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு போன் செய்து விசாரித்துள்ளார். அதற்கு அவரது மாமியார் பாலசரஸ்வதி கோதைசேரிக்கு சென்று விட்டாள் என்று கூறியுள்ளார். உடனே சுப்பையா தனது உறவினர்களுடன் ஏர்வாடிக்கு வந்து விசாரித்துள்ளனர். அப்போது பாலசரஸ்வதி ஆட்டோவில் சென்றுள்ளதாக கூறியுள்ளனர். இந்நிலையில் ஆங்காங்கே தேடி பார்த்தபோது ஏர்வாடி - கோதைசேரி ரோட்டில் ஆலங்குளம் குளம் அருகே பாலசரஸ்வதி பிணமாக கிடந்துள்ளார். அவரது கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினும் காணவில்லை. இச்சம்பவம் குறித்து சுப்பையா ஏர்வாடி போலீசில் புகார் தெரிவித்தார். உடனே ஏர்வாடி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் விரைந்து உடலை கைப்பற்றினர். மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸ் எஸ்.பி. ஆஸ்ராகர்க் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கொலைக்குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தனிப்படை போலீசார் கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து, இளம்பெண்னை ஏற்றி சென்ற ஆட்டோ டிரைவரை தேடிவருகின்றனர். கொலை செய்யப்பட்ட பாலசரஸ்வதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. இரவு நேரத்தில் தனியாக சென்ற இளம் பெண்னை கொலை செய்து கொள்ளையடித்த இச்சம்பவம் ஏர்வாடி பகுதிகளில் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |