Posted by Haja Mohideen
(Hajas) on 10/27/2009
|
|||
நெல்லையில்
நெல்லை வண்ணார்பேட்டையில் புதிய தொழிலாளர் நல ஆஸ்பத்திரி கட்டப்படுகிறது. மத்திய மந்திரி மல்லிகார்ஜுன கார்கே இன்று அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைக்கிறார். தொழிலாளர் நல ஆஸ்பத்திரி நெல்லை வண்ணார்பேட்டை சாலைத்தெருவில் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் எனப்படும் இ.எஸ்.ஐ. சார்பில் ரூ.50 கோடியில் 100 படுக்கை வசதி கொண்ட தொழிலாளர் நல ஆஸ்பத்திரி கட்டப்படுகிறது. இந்த ஆஸ்பத்திரியில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். அடிக்கல் நாட்டு விழா இந்த ஆஸ்பத்திரி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு சாலைத்தெருவில் நடைபெறுகிறது. விழாவில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை மந்திரி மல்லிகார்ஜுன கார்கே சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் மத்திய மந்திரிகள், தமிழக அமைச்சர்கள் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை இ.எஸ்.ஐ. கழக மருத்துவ ஆணையர் கே.தியாகி, மேலாண்மை இயக்குனர் ஸ்ரீவஸ்தவா, கூடுதல் ஆணையர் பரசுராமன், நெல்லை இணை இயக்குனர் எஸ்.ரவிச்சந்திரன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் டாக்டர் புருஷோத்தம் விஜயகுமார் ஆகியோர் செய்து உள்ளனர். ராமசுப்பு எம்.பி. அறிக்கை இதுபற்றி ராமசுப்பு எம்.பி. வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:- நெல்லையில் தொழிலாளர் நல ஆஸ்பத்திரிக்கு இன்று மாலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை மந்திரி மல்லிகார்ஜுன கார்கே அடிக்கல் நாட்டுகிறார். அவருக்கு நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பாக வண்ணார்பேட்டையில் சிறப்பான வரவேற்று அளிக்கப்படுகிறது. எனவே வரவேற்பு நிகழ்ச்சியிலும், அடிக்கல் நாட்டு விழாவிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியினர் தொழிலாளர் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |