Posted by Haja Mohideen
(Hajas) on 10/29/2009
|
|||
நெல்லை-தென்காசி அகல ரெயில் பாதை பணி 1 1/2 ஆண்டில் முடியும்
நெல்லை-தென்காசி இடையிலான அகல ரெயில் பாதை பணிகள் 1 1/2 ஆண்டில் முடிவடையும் என்று மதுரை கோட்ட மேலாளர் அனில் சின்கால் கூறினார். அதிகாரி ஆய்வு தென்னக ரெயில்வே மதுரை கோட்ட மேலாளர் அனில் சின்கால் நேற்று காலை நெல்லைக்கு சிறப்பு ரெயில் மூலம் வந்தார். அவர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ள 2-வது புதிய நுழைவு வாசல் மற்றும் பல்வேறு விரிவாக்கப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தண்டவாளங்கள், ரெயில் பெட்டி பராமரிப்பு பிட்லைன்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். நெல்லையில் இருந்து மதுரை வரையிலான தண்டவாளங்களை பலப்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 11/2 ஆண்டில் பணிமுடியும் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள 2-வது நுழைவு வாசல் அடுத்த மாதம் (நவம்பர்) செயல்படும். மேலும் பயணிகள் வசதிக்காக அடுத்தடுத்த பிளாட்பாரங்களுக்கு செல்ல மேலும் ஒரு நடைபாலம் அமைக்கப்பட உள்ளது. நெல்லை-தென்காசி இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் 11/2 ஆண்டில் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம். மின் பாதை விழுப்புரம்-மதுரை இடையே மின்மயமாக்கும் திட்டம் வருகிற மார்ச் மாதம் முடியும். தென்பகுதிக்கு அடுத்த நிதி ஆண்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்படும். நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் புரோக்கர்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நடவடிக்கை தொடரும். பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைப்பது குறித்து அரசுக்கு பரிந்துரை கடிதம் வந்த பிறகு மத்திய, மாநில அரசுகளின் பங்கீட்டின் மூலம் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கோட்ட மேலாளர் அனில் சின்கால் கூறினார். அதிகாரிகள் இந்த ஆய்வின்போது கோட்ட வணிக மேலாளர் ஏசியா சந்த், நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய மேலாளர் கல்யாணி, கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வேணுகோபால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். முன்னதாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்திருந்த கோட்ட மேலாளரிடம், ராமசுப்பு எம்.பி. தன்னுடைய கோரிக்கை மனுவை அளித்தார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=523299&disdate=10/29/2009&advt=2 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |