Posted by Haja Mohideen
(Hajas) on 11/2/2009
|
|||
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பாளை. -வண்ணார்பேட்டை இடையே இணைப்புச் சாலை 02 Nov 2009 03:49:15 AM IST
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சிகள் தின விழாவில் அவர் மேலும் பேசியதாவது: இம் மாநகர்ப் பகுதியில் குடிநீர் பிரச்னை அண்மைகாலமாக ஏற்பட்டு வருகிறது. இதற்கு மக்கள் தொகை அதிகரிப்பு, நகர் விரிவாக்கம் என இரு காரணங்களைக் கூற முடியும். திம்மராஜபுரம், பெருமாள்புரம் பகுதிகள் ரெட்டியார்பட்டியைத் தாண்டி விரிவடைந்துச் செல்கிறது. வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், சந்திப்பு பகுதிகளில் அதிக அளவு மக்கள் தொகை உள்ளது. இதை கருத்தில் கொண்டு 3 புதிய குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதில், ஒரு திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. இரு பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளன. மாநகரில் நகரம் ஆர்ச் தொடங்கி சமாதானபுரம் வரை ஒரே சாலை மட்டும் இருப்பதால், போக்குவரத்து நெரிசல் பிரச்னை தீர்க்க முடியாமல் இருந்தது. தற்போது வண்ணார்பேட்டை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகத்தில் இருந்து கொக்கிரகுளம் வரை புதிதாக இணைப்புச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சாலை வயல்வெளிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதால் உடனடியாக தார் சாலையாக மாற்றமுடியாமல் உள்ளது. மழைக்காலத்துக்கு பின்னர், அது தார் சாலையாக மாற்றப்படும். இதேபோல வண்ணார்பேட்டை -பாளையங்கோட்டை மண்டல அலுவலகம் வரை புதிதாக ஒரு இணைப்புச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்கானப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றார் சுப்பிரமணியன். விழாவுக்கு துணை மேயர் கா. முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மாநகர பொறியாளர் ஜெய் சேவியர், செயற்பொறியாளர் நாராயணன் நாயர், மண்டலத் தலைவர்கள் பூ. சுப்பிரமணியன், எஸ்.எஸ். முகம்மது மைதீன், உதவி ஆணையர்கள் சுல்தானா, கருப்பசாமி உள்பட பலர் பங்கேற்றனர். ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 59 பயனாளிகளுக்கு ரூ. 10,48,000 மானியமாக வழங்கப்பட்டது. http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Thirunelveli&artid=148582&SectionID=139&MainSectionID=139&SEO=&Title=போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பாளை. -வண்ணார்பேட்டை இடையே இணைப்புச் சாலை |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |