Posted by Haja Mohideen
(Hajas) on 11/4/2009
|
|||
நெல்லை சந்திப்பில் விபத்தை ஏற்படுத்தும் பள்ளம்
நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் எதிரே சாலையில் உள்ள பள்ளத்தினால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சரிசெய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர். அபாய பள்ளம் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தின் வடக்கு பகுதியான பாளை. ஐகிரவுண்டு பஸ்கள் செல்லும் சாலையில், இந்தியன் வங்கி அருகே மெயின் ரோட்டில் கிழக்கு மேற்காக ஒரு பள்ளம் உள்ளது. பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதற்காக தோண்டிய குழியை சரியாக மூடாததால் இந்த பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் சிக்கி வாகனங்களில் செல்கிறவர்கள் பலர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் செல்கிறவர்கள் பாதிக்கப்படுகின்றனர். வாகனங்களும் குழயில் ஏறி இறங்கும்போது சேதம் அடைவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். அதிகாரிகள் கவனிப்பார்களா? ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்கிற பிரதான சாலையில் இந்த பள்ளம் இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றன. இப்படி விபத்துகளை உருவாக்குகிற இந்த பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். பஸ் நிலையம் இதே போல நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் உள்ள சாலையும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. http://www.dailythanthi.com/article.asp?NewsID=524866&disdate=11/5/2009&advt=2 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |