Posted by Sabersathik
(sabersathik) on 11/6/2009
|
|||
2010ஆம் ஆண்டுக்கான சென்னை உயர் நீதிமன்ற விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் ஏ.ஆறுமுகசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு, ஜனவரி 13ஆம் தேதி உயர் நீதிமன்றம் விடுமுறை, ஜனவரி 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு. பொங்கல். ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம், ஜனவரி 16ஆம் தேதி குடியரசு தினம், மார்ச் 16ஆம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பு. ஏப்ரல் 2ஆம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 14ஆம் தேதி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் பிறந்த நாள். செப்டம்பர் 1ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி. செப்டம்பர் 9ஆம் தேதி உயர் நீதிமன்றம் விடுமுறை, செப்டம்பர் 10ஆம் தேதி ரம்ஜான், நவம்பர் 4ஆம் தேதி உயர் நீதிமன்றம் விடுமுறை, நவம்பர் 5ஆம் தேதி தீபாவளி, நவம்பர் 17ஆம் தேதி பக்ரீத், டிசம்பர் 17ஆம் முகரம். இதுதவிர, உழவர் திருநாள் (ஜனவரி 16), மிலாது நபி (பிப்.27), மகாவீர் ஜெயந்தி (மார்ச் 28), மே தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்டு 15), விநாயகர் சதுர்த்தி (செப்டம்பர் 11), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), ஆயுத பூஜை (அக்டோபர் 16), விஜயதசமி (அக்டோபர் 17), கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25) ஆகியவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் மேற்கண்ட விடுமுறை நாட்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. 2010ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி முதல் ஜூன் 6ஆம் தேதி வரை உயர் நீதிமன்றம் கோடை விடுமுறை. அக்டோபர் 9ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தசரா விடுமுறை, டிசம்பர் 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கிறிஸ்துமஸ் விடுமுறை என்று கூறப்பட்டுள்ளது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |