Posted by Kashif
(sohailmamooty) on 11/7/2009
|
|||
அரிக்கோடு: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், அரிக்கோடு - மூர்க்கநாடு இடையே சாலியாறு ஓடுகிறது. இதில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்த படகு ஒன்று கவிழ்ந்ததில், ஒரு மாணவி உட்பட எட்டு பேர் பலியான சம்பவத்தில் ஆற்றில் தத்தளித்த தன் சக மாணவர்கள் இருவரை காப்பாற்றி விட்டு, ஷமீம் என்ற மாணவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். அரிக்கோடு பகுதியிலிருந்து, இந்த ஆற்றை கடந்துதான் மாணவ, மாணவியர் மூர்க்கநாடு பள்ளிக்குச் செல்ல வேண்டும். சில நாட்களுக்கு முன் பள்ளி முடிந்து படகில் திரும்பியவர்களில் எட்டு பேர் பலியான சம்பவம், மாநிலத்தையே உலுக்கி உள்ளது. இச்சம்பவத்தில் பலியான, பிளஸ் 1 கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர் ஷமீம் (16), படகு கவிழ்ந்ததும், ஆற்று நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த சக மாணவர் இருவரை, காப்பாற்றி கொண்டு வந்து கரையில் சேர்த்தார். சோர்வாக காணப்பட்ட அவரை, கரையில் இருந்த பிற மாணவர்கள் தடுத்தும், ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த மற்றொரு மாணவரைக் காப்பாற்ற நீரில் குதித்தார். அப்போது துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கி இறந்தார். தன் உயிர் போனாலும், சக மாணவர்களை காப்பாற்றிய அவரது உறுதிமிக்க வீரத்தை, கிராமத்தினர் நெகிழ்ந்து கண்கலங்கினர். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |