Posted by Haja Mohideen
(Hajas) on 11/15/2009
|
|||
செங்கோட்டை அருகே பயங்கரம்
செல்போனில் "மிஸ்டு கால்" தொல்லை கொடுத்து வந்ததை தட்டிக் கேட்டவர் அடித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- "மிஸ்டு கால்" தொல்லை நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பெரியபிள்ளை வலசை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 65). இவருடைய மகன் மாரியப்பன் (45). கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக மாரியப்பன் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது செல்போனுக்கு அடிக்கடி "மிஸ்டு கால்"கள் வந்த வண்ணம் இருந்தன. இதுபற்றி மாரியப்பன் மனைவி அவரிடம் தெரிவித்தார். இதனால் தொடர்ந்து மிஸ்டு கால் கொடுத்து தொல்லை கொடுத்து வந்த அந்த செல்போன் எண் யாருடையது? என்று மாரியப்பன் விசாரித்து வந்தார். அப்போது, குத்துக்கல் வலசையில் இலத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்த காசிகிருஷ்ணன் மகன் அருணாசலம் (28) என்பவர் செல்போன் எண்ணில் இருந்து மிஸ்டு கால்கள் வந்திருப்பது தெரியவந்தது. அருணாசலம் தற்போது பெரியபிள்ளை வலசையில் உள்ள தனது சித்தி அல்லி பாப்பா வீட்டில் தங்கி இருந்து ஆட்டோ ஓட்டி வந்தார். முதியவர் அடித்து கொலை சம்பவத்தன்று மிஸ்டு கால் தொல்லை குறித்து விசாரிக்க வேலுச்சாமி, மாரியப்பன் ஆகிய 2 பேரும் அருணாசலத்தை தேடிச் சென்றனர். அவர்கள் ஒரு கடை முன்பு நின்று கொண்டு இருந்தபோது அந்த பக்கமாக அருணாசலம் வந்தார். அவரிடம், இனி "மிஸ்டு கால்" தொந்தரவு கொடுத்தால் அது பற்றி போலீசில் தெரிவிக்கப்படும் என்று எச்சரித்தனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருணாசலம், அருகில் கிடந்த கட்டையால் வேலுச்சாமியின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த வேலுச்சாமி உடனடியாக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வேலுச்சாமி பரிதாபமாக இறந்தார். கைது இந்த சம்பவம் குறித்து செங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்கயர்கரசி வழக்குப் பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் அசோகன், ஆட்டோ டிரைவர் அருணாசலத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். http://www.dailythanthi.com/article.asp?NewsID=527147&disdate=11/15/2009 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |