Posted by Kashif
(sohailmamooty) on 11/16/2009
|
|||
108 வருடத்திற்கு பிறகு வரும் ‘கங்கண சூரிய கிரகணம்’ வரும் ஜனவரி 15ம் தேதி நிகழ்க்கிறது. அரிய நிகழ்வாக 2010 ஜனவரி மாதம் இரண்டு கிரகணங்கள் நிகழவுள்ளன. புத்தாண்டு அன்று முதல்நாள் சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. ஜனவரி 15ம் தேதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இக்கிரகணம் தமிழகத்தில் கன்னியாகுமரி நெல்லை தூததுக்குடி, விருதுநகர், நாகப்பட்டிணம், கடலூர், ராம்நாடு, சிவகங்கை, திருச்சி , புதுகோட்டை,தஞ்சாவூர் உள்பட 12 மாவட்டங்களில் தெளிவாகத் தெரியும். இதுகுறித்து கலெக்டர் ராஜேந்திர ரத்னு நிருபர்களிடம் கூறுகையில், இந்த சூரிய கிரகணம் மிகவும் சிறப்பானது. இதற்குப் பெயர் கங்கண சூரிய கிரகணம். இதற்கு முன்னர் 1901ம் ஆண்டு நவம்பர் 11ம் நாள் கங்கண சூரிய கிரகணம் நிகழ்ந்துள்ளது. மீண்டும் 2019 டிசம்பர் அன்றுதான் கங்கண சூரியகிரகணம் தமிழத்தில் தெரியும். புவியை நிலவு ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இதனால் புவிக்கு அருகே வரும்போது 3 லட்சத்து 57 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தொலைவிலும், புவியை விட்டு விலகி செல்கையில் 4 லட்சத்து 7 ஆயிரத்து 100 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவு இருக்கும். தொலைவில் இருக்கும் போது நிலவின் தோற்றம் சிறியதாக இருக்கும். எனவே புவியை விட்டு விலகிச் செல்கையில் சூரிய கிரகணம் நடந்தால் சந்திரனால் சூரியனை முழுமையாக மறைக்க முடியாது. இதனையே கங்க சூரிய கிரகணம் என்கிறோம். ஜனவரி முதல் நாள் நிகழும் சந்திர கிரகணம் அதிகாலை 12.21க்குத் துவங்கி சுமார் 1.24 மணிக்கு முடிகிறது என்றார் ராஜேந்திர ரத்னு. Source: தட்ஸ்தமில் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |