Posted by Kashif
(sohailmamooty) on 11/19/2009
|
|||
ஹை-டெக் ஜம்ராத் பாலம் தயார் நிலையில்.. சவூதியில் அரஃபா தினம் அறிவிப்பு உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் சவூதி அரேபியாவில் உள்ள இரு புனித தலங்களான மக்கா & மதீனாவை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். பன்றிக் காய்ச்சல் பயம் உலகை ஆட்டிப்படைக்கும் இவ்வேளையில், அவற்றையெல்லாம் புறம் தள்ளி, இஸ்லாத்தின் ஐம்பெருங்கடமைகளுள் ஒன்றான ஹஜ் கடமையை நிறைவேற்ற பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் நாள்தோறும் சவூதிக்கு வந்து கொண்டு உள்ளனர். இந்நிலையில், ஹஜ் கிரியையின் மிக முக்கிய அம்சமான, பிறை 9 ஆம் நாள் (அரஃபா தினம்) வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி வியாழக்கிழமை என்பதாக, சவூதி சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. நேற்று (17.11.2009 செவ்வாய்) மாலை, சவூதியின் பல பகுதிகளில் பிறை பார்த்ததின் அடிப்படையில், சவுதியில் (உலகம் முழுவதும் அல்ல) துல்ஹஜ் முதல் பிறை நவம்பர் 18 புதன் கிழமை என்றும், அரஃபா தினம் நவம்பர் 26 வியாழக்கிழமை என்றும், ஹஜ் பெருநாள் நவம்பர் 27 வெள்ளிகிழமை என்றும், சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி அப்துர்ரஹ்மான் அல்-கெல்யா அறிவித்தார். இந்நிலையில், ஜம்ராத்தில் கல் எறியும் பகுதியான மினாவில் உள்ள “ஜம்ராத் பாலம்”, ஐந்தடுக்குகளாக ஹை-டெக் வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டு இவ்வருட ஹஜ் கிரியைகளுக்காக தயாராகி உள்ளது. கிட்டத்தட்ட 4.5 பில்லியன் சவூதி ரியால் பட்ஜெட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த 5 அடுக்கு ஜம்ராத் பாலம், ஒரு மணி நேரத்தில், 3 லட்சம் பேர்கள் கல்லெறிய வசதியாக அமையும். கல்லெறியும் இடத்தில் ஹாஜிகளுக்கு பாதுகாவலாகவும், கூட்டத்தை ஒழுங்கு படுத்தவும், 12000 காவல்துறையினர் தயாராக இருப்பார்கள் என்று ஹஜ் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்துள்ளார். 10 நுழைவாயில்களும், 12 வெளியேறும் வாயில்களும் உள்ளதாக அமைக்கப்பட்டுள்ள இந்த் பாலம், கூட்ட நெரிசலை தவிர்த்து, உயிர்ச்சேதம் ஏற்படுவதை தவிர்க்க உதவுவதாக அமையும் இன்ஷா அல்லாஹ். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |