Posted by Sabersathik
(sabersathik) on 12/4/2009
|
|||
காத்மாண்டு: பூமி வெப்பமயமாகி, பனி மலைகள் உருகுவதால் ஏற்படும் ஆபத்து குறித்து உலகின் கவனத்தை ஈர்க்க, எவரெஸ்ட் சிகரத்தில் நேபாள அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது.உலக நாடுகளில் வெளிப்படும் கார்பன் டை ஆக்சைடு, மாசு ஆகியவற்றால் பூமி வேகமாக வெப்பமயமாகி வருகிறது. அதனால் ஆர்டிக் கடலில் பனி பாறைகள் வேகமாக உருகத் தொடங்கியுள்ளன. கடல் மட்டம் அதிகரித்து தீவு நாடுகள் அழியும் அபாயம் உள்ளதாக புவியியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.காற்றில் மாசு மற்றும் வெப்பத்தைக் குறைப்பது குறித்து மாநாடு டென்மார்க் நாட்டின் கோபன்ஹெகன் நகரில் இந்த மாதம் சர்வதேச மாநாடு நடைபெற உள்ளது. அதுபற்றி உலக நாடுகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பல் உதவியுடன் மிதந்தபடி மாலத் தீவு அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. அதைத் தொடர்ந்து, பனிமலையான எவரெஸ்ட் சிகரத்தில் நேபாள அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது. கடல் மட்டத்தில் இருந்து 5,242 மீட்டர் உயரத்தில், உறைய வைக்கும் பனியில் அமைச்சர்கள் கூடினர். நேபாள பிரதமர் மாதவ் குமார் நேபாள் மற்றும் 24 அமைச்சர்கள் அதில் பங்கேற்றனர். அமைச்சரவை குழுவுக்கு பாதுகாப்பாக மீட்பு படை, மலையேற்ற பயிற்சி பெற்ற குழு, 6 டாக்டர்கள் உடன் சென்றனர்.மாலத் தீவு, நேபாளத்தைத் தொடர்ந்து பூமி வெப்பமயமாவதைத் தடுக்கும் முயற்சியில் தனது பங்காக, கார்பன் டை ஆக்சைடு வெளியிடுவதைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக இந்தியாவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |