மாணவர்களே! இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவங்களில் பொறியியல் படிக்க உடனே தயாராகுங்கள்

Posted by Kashif (sohailmamooty) on 12/15/2009

மாணவர்களே! இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவங்களில் பொறியியல் படிக்க உடனே தயாராகுங்கள்

உயர் கல்வி
AIEEE- என்ற நுழைவு தேர்வு இந்தியாவில் உள்ள மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் B.E/B.Tech, B.Arch/B.Plan படிக்க நடத்தும் தேர்வாகும்.

இந்த தேர்வை பற்றி தமிழக முஸ்லீம் சமுதாயம் பெரும்பாலும் அறியாமலேயே உள்ளது. AIEEE -2010 தேர்வை பற்றிய முழுவிபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 20 இடங்களில் NIT-என்ற உயர்கல்வி நிறுவனம் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகின்றது. இதை தவிற பிட்ஸ் பிலானி, மற்றும் நிகர் நிலை பல்கலை கழகங்கள் மற்றும் டெல்லி பல்கலை கழகம் போன்ற மத்திய பல்கலை கழகங்கள் ஆகியவற்றில் படிக்க AIEEE என்ற நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்துகின்றது, இதில் நாம் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுப்பதின் மூலம் இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் பயில முடியும். இந்த உயர்கல்வி நிறுவங்களில் கல்வி தரம் உயர்ந்ததாக இருக்கும் , இங்கு படிப்பவர்களுக்கு வளாக தேர்வு (campus interview) மூலம் மிக எளிதில் வேலைகிடைகின்றது.

இறுதி ஆண்டு படிக்கும் போதே அதிக சம்பளத்தில் படித்ததற்க்கு ஏற்ப நல்ல வேலைகிடைக்கின்றது. மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்புகளும் கிடைக்கின்றன கல்வி உதவியில் மத்திய அரசு ஐஐடியை போலவே NIT-க்கும் முன்னுரிமை கொடுக்கின்றது. இந்தியாவில் பொறியியல் துறையில் ஐஐடி-க்கு அடுத்து முன்னனியில் இருப்பது NIT தான். தமிழகத்தில் திருச்சியில் NITஉள்ளது. இன்னும் சில NIT-கள் தமிழகத்தில் வர இருக்கின்றது. தமிழகத்தில் இருந்தாலும் AIEEE என்ற தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே இங்கு படிக்க முடியும். இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை.

இட ஒதுக்கீடு : NIT-யில் (முஸ்லீம்களையும் சேர்த்து) பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கா 27% இட ஒதுக்கீடு உள்ளது.

AIEEE 2010 : தற்போது NIT-யில் (பிற மத்திய பல்கலை கழகங்களையும்சேர்த்து) +2 படித்த மாணவர்கள் 2010 ஆண்டு பொறியியல் படிப்பிற்க்கு சேர்வதற்க்கான நுழைவு தேர்வின் (AIEEE -2010) விண்ணப்பம் விணியோகிகப்பட்டு வருகின்றது. (தேர்வை பற்றிய விபரங்கள் அட்டவணை இடம் பெற்றுள்ளது). விண்ணப்ப படிவம் பெறுவதில் பிரச்சனை இருந்தால் நமது மாணவரணி சகோதரர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்

மாணவ மாணவியர்களே!

பெரும்பாலும் நாம் படிப்பது நமது கல்வி தரத்தை உயர்த்திகொள்வதற்க்கும், நல்ல வேலையில் சேர்ந்து நல்ல சம்பளம் பெறுவதற்க்கும், வெளி நாடுகளில் சென்று படித்து சிறந்த கல்வியை பெற்று நல்ல சம்பளத்துடன் நல்லவேலையில் சேர்வதற்க்கும்தான்.
கல்வி துறையில் முன்னேற வேண்டும் என்றால் இது போன்ற நுழைவு தேர்வு தேர்வுகளை எழுதி அதில் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும். ஏதோ எல்லாரும் படிக்கின்றனர் நானும் படிக்கின்றேன் என்று இருந்துவிடக்கூடாது, எப்படியாவது தேர்வில் பாஸ் பன்னிவிடலாம் நமது பெற்றோர்கள் எங்காவது கடன் வாங்கியாவது நம்மை படிக்கவைத்துவிடுவார்கள் என்று தவறாக கணக்கு போட்டு தேர்வில் கோட்டைவிட்டுவிடதீர்கள், .
பணத்தை வைத்து கல்லூரியில் இடம்தான் வாங்கமுடியும், படிப்பை வாங்கமுடியாது, வேலையையும் வாங்க முடியாது, நன்றாக படித்தால் தான் நல்ல வேலைகிடைக்கும், எனவே பெற்றோர்களின் பணத்தை வீணாக்காமல் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் சேர முயற்சி செய்யுங்கள்., என்னதான் பணத்தை கொட்டி கொடுத்து படித்தாலும் இது போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் கிடைப்பது போன்ற கல்வி அறிவோ, வேலை வாய்ப்பு வசதிகளோ தனியார் பொறியியல் கல்லூரிகளில் கிடைப்பதில்லை. என்ன மதிப்பெண் எடுத்தாலும் நம் பெற்றோர் பணத்தை கொடுத்து ஏதாவது ஒரு (முஸ்லீம்) பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிடுவார்கள் என எண்ணாதீர்கள்.

பொதுவாக முஸ்லீம் பொறியியல் கல்லூரிகளில் கல்வி தரம் மிக குறைவாகவே உள்ளது, ஆனால் இவர்கள் வாங்கும் பணமோ மிக மிக அதிகமாக உள்ளது. எனவே முஸ்லீம் பொறியியல் கல்லூரிகளில் படிக்க வேண்டும் என்ற தவறான எண்ணத்தை தூக்கி போடுங்கள், IIT-JEE, AIEEE போன்ற தேர்வுகளை எழுதி, அதில் அதிக மதிப்பெண் எடுத்து ஐஐடி, NIT போன்ற உயர்கல்வி நிறுவங்களில் சேர முயற்சி செய்யுங்கள். தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்வின் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.

உங்களுக்கு உதவ நமது மாணவரணி எப்போதும் தயாராக இருகின்றது, உங்களுடைய கல்வி முன்னேற்றத்திற்க்கு நமது மாணவரணியை பயன்படுத்தி கொள்ளுங்கள். உயர் கல்வி நிறுவனங்களில் முஸ்லீம்களை படிக்கவைக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்படுகின்றது நமது TNTJ மாணவரணி, தமிழகத்தின் மூலை முடுக்குகளெள்ளாம் விழிபுணர்வு பிராசாரங்களையும் வழிகாட்டும் முகாம்களையும் நடத்தி வருகின்றது.

AIEEE 2010 நுழைவு தேர்வுக்கென்றே சிறப்பு வழிகாட்டுதல் குழுவை நமது மாணவரணியில் ஏற்படுத்தி உள்ளோம். நமது சகோதரர்களை தொடர்பு கொண்டு AIEEE 2010 தேர்வுகளை பற்றிய விளக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

ஆக்கம்:
S.சித்தீக்M.Tech
TNTJ மாணவரணி

http://www.tntj.net/?p=8616






Other News
1. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
2. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
3. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
4. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
5. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
6. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
7. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
8. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
9. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
10. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
11. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
12. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
13. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
14. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
15. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
16. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
17. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
18. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
19. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
20. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
21. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
23. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
24. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
25. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
26. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
27. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
28. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
29. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
30. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..