Posted by Haja Mohideen
(Hajas) on 12/31/2009
|
|||
வனவிலங்குகளால் சேதம் அடையும் பயிர்களுக்கு நிவாரணம்
வனவிலங்குகளால் சேதம் அடையும் பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது என்று களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் பத்ரசாமி கூறினார். வனப்பகுதிகள் ஆண்டு தோறும் குளிர்காலம் தொடங்கும் போது கேரள வனப்பகுதிகளில் உள்ள யானைகள் களக்காடு பகுதிக்கு இடம் பெயரும். இதை `வலசை` என்று சொல்வார்கள். இவ்வாறு இடம் பெயர்ந்து வருவது பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் பயிர் முறை மாற்றம் காரணமாகவும், விவசாய நிலப்பரப்பு வனத்தின் அருகே சென்று விட்ட காரணத்தினாலும் வன உயிரினங்கள் விளை நிலங்களில் புகுந்து பயிர் சேதம் ஏற்படுத்தி வருகின்றன. சில சமயம் பொருள் சேதமும், அரிதான சமயங்களில் உயிர் சேதமும் ஏற்பட்டு வருகிறது. நிவாரணம் இதை தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு, மத்திய அரசு நிதியில் இருந்து சூரிய மின்வேலியும் அகழிகளும் அமைத்து வருகிறது. நிதி ஒதுக்கீடு குறைவாகவே கிடைப்பதாலும், தமிழகம் முழுவதும் இந்த இடர்பாடு இருப்பதாலும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தூர அளவே இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே ஏற்படும் சேதங்களுக்கு அரசு நிவாரணம் அளிக்கிறது. ஆனால் பொதுமக்கள் இதை சரிவர பயன்படுத்திக்கொள்வது இல்லை. உரிய முறையில் விண்ணப்பிக்காததால் பல விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. விண்ணப்பிக்கும் முÛ வன அலுவலர் தணிக்கைக்கு பின்னர், வருவாய் ஆய்வாளரிடம் இருந்து பெற்ற சேத மதிப்பீடு சான்று (கிராம நிர்வாக அலுவலர் சான்று போதுமானது அல்ல), நில உரிமையாளர் அல்லது குத்தகைதாரர் என்பதற்கான சான்று `சிட்டா` அடங்கல் மற்றும் பட்டாவின் நகல், குத்தகைதாரர் ஒப்பந்தம், சேதத்தை காட்டும் புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் வனத்துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். உயிர் சேதம் ஏற்பட்டு இருந்தால் காவல் துறை முதல் தகவல் அறிக்கை நகல், பிரேத பரிசோதனை சான்று, வாரிசு சான்று மற்றும் வாரிசுதாரர்களிடம் இருந்து பெற்ற தடையில்லா சான்று. பொருள் சேதம் ஏற்பட்டு இருந்தால் சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் இருந்து பெற்ற சேத மதிப்பீடு ஆகியவற்றை முறைப்படி விண்ணப்பித்தால் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். மேலும் பதிவு செய்யப்படாத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்படும். லைசென்சு பதிவு செய்ய களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கிராம, நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் லைசென்சு பெற்று துப்பாக்கி வைத்து இருந்தால் உடனடியாக களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்துக்கு வந்து பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் வனத்துறை சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அந்த துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் பத்ரசாமி கூறினார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=537400&disdate=1/1/2010&advt=2 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |