Posted by Haja Mohideen
(Hajas) on 1/2/2010
|
|||
பணகுடி அருகே மலை அடிவாரத்தில் உள்ள தோட்டங்களில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன. பனை-தென்னை மரங்களை யானைகள் வேரோடு சாய்த்தன. யானைகள் அட்டகாசம் நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்து ரோஸ்மியாபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்த ஊர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்து உள்ளது. அங்கு ஏராளமான தென்னை, வாழை தோட்டங்கள் உள்ளன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வனத்துறையினர் காவலையும் மீறி காட்டு யானைகள் மலை அடிவாரப் பகுதிக்கு வந்தன. கண்ணுபுளி கேட் அருகே உள்ள மலைப் பாதை வழியாக வந்த யானைகள், ரோஸ்மியாபுரம் பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்தன. தோட்டத்தில் நின்ற தென்னை, பனை மரங்களை வேரோடு சாய்த்து, குருத்துகளை ருசித்து உள்ளன. தென்னங் கன்றுகளையும் சேதப்படுத்தி உள்ளன. வாழைகள் சேதம் பின்னர் அருகில் இருந்த வாழைத் தோட்டங்களிலும் யானைகள் புகுந்தன. நூற்றுக்கணக்கான வாழைகள் யானைகளின் கால்களில் மிதிபட்டு சேதமடைந்து உள்ளன. ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த லட்சுமணன், சேகர், சங்கரலிங்கம், செம்புலிங்கம் ஆகியோரின் தோட்டங்களில் யானைகள் அட்டகாசம் செய்து உள்ளன. நள்ளிரவில் குடியிருப்புக்கு அருகே உள்ள தோட்டங்களில் யானைகள் கூட்டமாக புகுந்து அட்டகாசம் செய்து இருப்பது அந்த பகுதி மக்களை பீதி அடைய செய்துள்ளது. இனி யானைகள் மலை அடிவாரத்துக்கு வராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து பாலசிங்கம் என்பவர் கூறும்போது, "மகேந்திரகிரி மலை முதல் கண்ணுபுளி வரை மின்காந்த தடுப்பு வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இதில் தடுப்பு மின்வேலி இல்லாமல் இடைவெளியாக உள்ள பகுதி வழியாக யானைகள் மலை அடிவாரத்துக்கு வந்து உள்ளன," என்றார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=537854&disdate=1/3/2010&advt=2 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |