Posted by Haja Mohideen
(Hajas) on 3/11/2010
|
|||
வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வசதியாக
வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வசதியாக, கோர்ட்டில் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளின் விசாரணை நேரம் மாற்றப்பட்டு உள்ளது என்று மாவட்ட முதன்மை நீதிபதி விஜயராகவன் கூறினார். சட்ட விழிப்புணர்வு முகாம் மானூர் அருகே உள்ள குறிச்சி குளத்தில் மகளிர் தினத்தையொட்டி இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. நெல்லை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் ஜனப்பிரியா டிரஸ்ட் சார்பில் இந்த முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவருமான எம்.விஜயராகவன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரமண சரசுவதி, தாழைïத்து போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குறிச்சி குளம் பஞ்சாயத்து தலைவி உம்மல் நிஷா வரவேற்று பேசினார். முகாமில் மாவட்ட முதன்மை நீதிபதி விஜயராகவன் பேசியதாவது:- உயர் பதவிகளை... முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் கிராமங்களில் குறிச்சி குளமும் ஒன்றாகும். உங்களுடைய பிரச்சினைகளை ஆராய்ந்து சட்டப்பூர்வமாக உதவ வந்துள்ளோம். பொதுமக்களுக்காக மாவட்டந்தோறும் இலவச சட்ட உதவி மையம் இயங்கி வருகிறது. மகளிர் தினம் கொண்டாடும் இந்த நேரத்தில், பெண்கள் குறிக்கோள்களை வளர்த்துக் கொண்டு அதற்கேற்ப தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மாவட்ட கலெக்டராக, நீதிபதியாக, போலீஸ் அதிகாரியாக பெண்கள் உயர் பதவிகளை அலங்கரித்து வருகிறார்கள். விசாரணை நேரம் மாற்றம் இங்கு பேசிய ஒருவர், முஸ்லிம்கள் சம்பந்தமாக வழக்குகள் கோர்ட்டுகளில் விசாரணைக்கு வரும்போது அவர்களால், மதிய நேரத்தில் தொழுகை செய்ய முடியாமல் போகிறது என்றும், எனவே வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையை மதியத்துக்கு மேல் வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, இந்த வாரம் முதலே நடைமுறைப்படுத்தப்படும். பொதுமக்கள் அளித்துள்ள 103 மனுக்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு வழங்கப்படும். இவ்வாறு மாவட்ட முதன்மை நீதிபதி விஜயராகவன் கூறினார். முடிவில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் செல்வம் நன்றி கூறினார். தலைமை குற்றவியல் நீதிபதி பொன்பிரகாஷ், கூடுதல் மாவட்ட நீதிபதி (பயிற்சி) செல்வி மகாலட்சுமி, முதன்மை சார்பு நீதிபதி உமாமகேசுவரி, 3-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா, நெல்லை வக்கீல்கள் சங்க செயலாளர் சிவக்குமார், வக்கீல்கள் செல்வி கலா, கண்ணகி என்ற மாலதி, ஜான்சன், மானூர் ïனியன் தலைவர் ஆ.க.மணி, குறிச்சி ஜமாத் தலைவர் மகுதுணன், தாசில்தார் சுப்பையா, தெற்குப்பட்டி பஞ்சாயத்து தலைவர் சுடலையாண்டி மற்றும் பலர் கலந்துகொண்டனர். http://www.dailythanthi.com/article.asp?NewsID=552430&disdate=3/11/2010&advt=2 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |