Posted by Mohamed Uvais
(jasmin) on 3/15/2010
|
|||
அபுதாபியில் நடைபெற்ற நேர மேலாண்மை நிகழ்ச்சி
ஐக்கிய அரபு அமீரகங்களின் தலைநகரமான அபுதாபியில் 12.03.2010, வெள்ளிக் கிழமை அன்று கேரளா சோசியல் சென்டரில் நேர மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. நெல்லை ஏர்வாடி நண்பர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பயிற்சி முகாமை சாதிக் அவர்கள் திருக்குர்ஆன் ஓதி துவக்கி வைத்தார். உவைஸ் பயிற்சியாளரைப் பற்றி அறிமுக உரையாற்றி, இது போன்ற நிகழ்ச்சிகளின் அவசியத்தை குறித்து விளக்கினார்.
மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் ஹுசைன் பாஷா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்களுக்கு நேரமேலாண்மை குறித்து பயிற்சியளித்தார். நேர மேலாண்மையின் அவசியம், தன்மைகள், நுட்பங்கள், நேரத்தை வீணாக்கும் காரணிகள், நாம் தீர்மானிக்க வேண்டிய இலக்குகள், வாழ்வின் இலட்சியம், வெற்றிக்கான சூத்திரம் ஆகியவை குறித்த வகுப்புகள் நடைபெற்றன. ஒலி ஒளியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந் நிகழ்ச்சியில் மிக எளிமையான முறையில் அனைவருக்கும் புரியும்படியான பாடத்திட்டங்கள் வடிவமைக்கப் பட்டிருந்தன.
இறுதியாக நன்றியுரையாற்றிய ஈமான் மக்கள் தொடர்பாளர் அப்துல்லாஹ், இந் நிகழ்ச்சி நமக்குள் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது எனவும், இது போன்ற நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து தொடந்து நடத்தப்படும் என்றும் கூறினார். மேலும், அமீரகங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
வந்தோம் வாழ்ந்தோம் என்ற சிந்தனையை மாற்றி வந்தோம் வெற்றி பெறுவோம் என்ற சீரிய சிந்தனையை தாங்கியவர்களாக அனைவரும் இறுதியில் கலைந்து சென்றனர். சிற்றுண்டி, தேநீருடன் மிகச் சிறப்பான ஏற்பாட்டை ஈமான் (EMAN) நண்பர்கள் செய்திருந்தனர்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |