Posted by Kashif
(sohailmamooty) on 3/16/2010
|
|||
இரத்த தானங்கள் அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – துபை மண்டலம் நடத்திய மாபெரும் இரத்த தான முகாம் 12-03-2010 அன்று காலை 8.00 மணியளவில் துபை – அல் வாசல் மருத்துவமனையில் ஆரம்பமாகியது. வாரத்தில் 6 நாட்கள் பரபரப்பாக உழைகை;கும் வெளி நாடுகளில் தங்கியிருக்கும் சகோதரர்களுக்கு வெள்ளிக்கிழமை ஒரு நாள் தான் முழு ஒய்வு எடுப்பதற்க்கு உரிய நாள். ஆயினும் காலை 7.30 மணிக்கே இரத்த தானம் செய்ய சகோதரர்கள் படையெடுத்து வந்தது நம்மை வியப்பில் ஆழ்த்தியது. நிகழ்ச்சியின் துணுக்குகள்: துபை கிளையான தேய்ராஇ சத்வாஇ ஹீருல் அன்ஸ் இ சோனாப்பூர்இ ஜெபல் அலி அல்கூஸ் ஆகிய பகுதிகளிருந்து ஆர்வமுடன் பங்கேற்ற சகோதர்களுக்கு அந்தந்த பகுதி கிளை பொறுப்பாளர்கள் அழகிய முறையில் வாகன ஏற்பாட்டினை செய்திருந்தனர். மதியம் 3 மணிவரை நடைப்பெற்ற முகாமில் 190 சகோதரர்கள் கலந்து கொண்டு 182 சகோதரர்கள குருதி தானம் அளித்தனர். இது நமது அமீரக வரலாற்றில் நடந்த மிகப்பெரிய இரத்த தான முகாமாகும். துபை – அல் வாசல் மருத்துவமனை வரலாற்றில் நடந்த இரத்த தான முகாமிலே இதுதான் மிகப்பெரிய முகாம் என்பது குறிப்பிடதக்கது. மருத்துவமனை ஊழியர்களும் நிர்வாகத்தினரும் நம்மை வியந்து பாராட்டினர். (எல்லா புகழும் அல்லாஹ்விற்கே). மாலை 5 மணிக்கு தாயகம் செல்லவிருந்த ஒர் சகோதரர் காலையில் வந்து இரத்த தானம் செய்து விட்டு வானூர்த்தி நிலையம் சென்றது நம்மை வியப்பின் உச்சிக்கே இழுத்து சென்றது. மாற்று மத சகோதரர்கள் இலங்கையை சார்ந்த சகோதரர்களும் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது. சகோ. சாதிக் (மருத்துவ அணி செயலாளர்) மற்றும் சகோ. சாந்து உமர் (மக்கள் தொடர்பு செயலாளர்) ஆகியோரின் சீரிய ஒருங்கிணைப்பில் நிகழ்ச்சி முழுவதும் செம்மையாக நடைபெற்றது. சகோ. அபுதாஹிர் அவர்களது தலைமையில் தொண்டர் அணியினர் சிறப்பான ஏற்பாட்டினை செய்திருந்தினர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – துபை மண்டலத்தின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். உயிர் காக்கும் இம்முகாமிற்கு ஒத்துழைத்த, பணியாற்றிய , இரத்த தானம் செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் அல்லாஹ் ஈருலகிலும் நன்மையை அளித்திடுவானாக |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |