Posted by S.i.sulthan
(sisulthan) on 3/19/2010
|
|||
வள்ளியூர் அருகே போலி பத்திரம் தயாரித்து ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்பனை செய்ய முயன்ற 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் வள்ளியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வள்ளியூர்- ஏர்வாடி மெயின் ரோட்டின் அருகே பெட்ரோல் பங்க் வடபுறம் ஏர்வாடியை சேர்ந்த அகமதுமைதீன் (60) என்பவரின் குடும்பத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் 60 சென்ட் காலி நிலம் உள்ளது. இதனை ஏர்வாடியை சேர்ந்த சேக்அப்துல்காதர் மகன் முகமதுகனி, அவரது மகன் பீர்முகம்மது ஆகியோர் போலிபத்திரம் மூலம் நிலத்தை அபகரித்து விற்பனை செய்ய திட்டமிட்டனர். அதற்காக பழவூரை சேர்ந்த சூரியநாராயணன் மகன் சிதம்பரம், சண்முகம் மகன் மூக்கையா, பணகுடியை சேர்ந்த முத்துசாமிபிள்ளை மகன் அய்யப்பன், சுந்தரம்பிள்ளை மகன் சுந்தர்ராஜ், ராஜாமணி மகன் ஜவஹர்ராஜ், முத்துசாமிபிள்ளை மகன் ஆறுமுகம் ஆகியோர் கூட்டாக சேர்ந்து அகமது மைதீன் நிலத்திற்கு போலிபத்திரம் தயார் செய்துள்ளனர்.போலி பத்திரத்தை முகமதுகனி மற்றும் பீர்முகம்மது பெயரில் தயார் செய்து அதே கும்பலை சேர்ந்த சிதம்பரம் என்பவருக்கு நிலத்தை விற்பனை செய்ய பவர் பத்திரம் கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து மீண்டும் அதே கும்பலை சேர்ந்த மூக்கையாவிற்கு கிரையம் செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த நிலத்தின் உண்மையான உரிமையாளர் அகமதுமைதீன் தனது நிலத்தை சுற்றி கல்தூண் நட்டு, முள்கம்பி வேலி போட்டுள்ளார். உடனே அந்த கும்பலை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் கல்தூண்களை உடைத்தும், முள்கம்பி வேலிகளை சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்து ஏர்வாடி அகமதுமைதீன் வள்ளியூர் போலீசில் புகார் செய்தார்.புகார் குறித்து இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் போலிபத்திரம் தயார் செய்து நிலத்தை 8 பேர் கொண்ட கும்பல் அபகரிக்க முயன்றது தெரியவந்தத |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |