Posted by Kashif
(sohailmamooty) on 3/30/2010
|
|||
பென்னாகரம்: பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் இன்பசேகரன் 36,354 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 77,669 வாக்குகள் பெற்றார். பாமக வேட்பாளர் தமிழ்க்குமரன் 41,285 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அதிமுக வேட்பாளர் அன்பழகன் 26,787 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் காவேரி வர்மன் 11,406 வாக்குகளும் மட்டுமே பெற்று டெபாசிட்டையே இழந்தனர். பதிவான மொத்த ஓட்டுக்களில் 6ல் ஒரு பங்கு ஓட்டுக்களை வாங்காததால் அதிமுக, தேமுதிகவின் டெபாசிட் காலியானது. மேலும் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட 27 சுயேச்சை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர். இத் தொகுதியில் உள்ள 2,01,008 வாக்காளர்களில், 84.95 சதவீதம் பேர் வாக்களித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பதிவானதை விட 13 சதவீதம் அதிகமாகும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட பெரியண்ணன் 74,109 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் வெற்றிவேல் 47,177 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் தனபாண்டி 10,567 வாக்குகளும் பெற்றனர். இம்முறை அதிமுகவின் வாக்கு வங்கி பெருமளவில் சரிந்து போய்விட்டது. அந்தக் கட்சி 20,390 வாக்குகளை இழந்து டெபாசிட்டையும் பறி கொடுத்துள்ளது. அதே நேரத்தில் தேமுகவின் வாக்குகள் 839 அதிகரித்துள்ளது. ஆனாலும் அக் கட்சியின் டெபாசிட் இழப்பு தொடர் கதையாகியுள்ளது. கடந்த தேர்தலிலும் இங்கு தேமுதிக டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |