சென்னை, மார்ச் 31: 2010-ம் ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணத்துக்கு தமிழக முஸ்லிம்களிடமிருந்து, மாநில ஹஜ் குழு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையில் ரோஸி டவர் மூன்றாவது தளத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழு நிர்வாக அலுவலகத்தில் 1.4.2010 முதல் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இணைய தளத்திலிருந்தும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விதிமுறைகள் என்னென்ன? : ஒரு விண்ணப்பத்தில் அதிகபட்சம் 5 பேர் விண்ணப்பிக்கலாம். இவர்கள் அனைவரும் நெருங்கிய உறவினர்களாகவும், ஒரே மாவட்டத்தைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
கட்டணம்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பரிசீலனைக் கட்டணமாக பயணி ஒருவருக்கு ரூ. 200 வீதம் மத்திய ஹஜ் குழு வங்கி கணக்கு எண்: 30683623887}ல் செலுத்தி, அதற்கான ரசீதை இணைக்க வேண்டும். இந்தக் கட்டணம் திருப்பித் தரப்படமாட்டாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30.4.2010}க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள் கம்ப்யூட்டர் மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். சவுதி அரேபிய அரசின் புதியக் கட்டுப்பாட்டின்படி, குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட பயணிகள், சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். இதனுடைய நகலையும், விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
சர்வதேச பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருப்பவர்கள், அதற்கான சான்றை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பலாம். ஆனால் முழுமையான விண்ணப்பங்களை மத்திய ஹஜ் குழுவுக்கு சமர்ப்பிப்பதற்கு முன்பு, சர்வதேச பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும்.
ஹஜ் பயணத்துக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து விண்ணப்பித்து தெரிவு செய்யப்படாதவர்களின் விண்ணப்பங்களை நேரடியாக தேர்வு செய்து உறுதிப்படுத்த மத்திய ஹஜ் குழு முடிவெடுத்துள்ளது. இவர்கள் குலுக்கலின்றி 2010 புனிதப் பயணத்துக்கு உறுதி செய்யப்படுவர்.
தினமணி, Dated.01-04-2010 Download As PDF