Posted by Haja Mohideen
(Hajas) on 4/3/2010
|
|||
நெல்லையில் உள்ள பழக்கடைகளில் நேற்று சுகாதார அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது மெழுகு பூசி விற்பனை செய்த ஆப்பிள்களை பறிமுதல் செய்து அழித்தனர். மெழுகு பூசப்பட்ட ஆப்பிள் நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழக்கடைகளில் மெழுகு பூசப்பட்ட ஆப்பிள் பழங்கள், பவுடர் தடவப்பட்ட திராட்சை, அழுகிய பழங்களில் தயார் செய்யப்பட்ட ஜுஸ் போன்றவை விற்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் கலுசலிங்கம் மேற்பார்வையில் உணவு ஆய்வாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் 3 குழுக்களாக சென்று நேற்று பழக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதிரடி சோதனை உணவு ஆய்வாளர் காளிமுத்து தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் முருகேசன், சாகுல்அமீது, வேலாயுதம், ஆறுமுகம், பெருமாள், பாலு, முருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பாளையங்கோட்டை புதிய பஸ்நிலையத்தில் உள்ள 4 பிளாட் பாரங்களிலும் உள்ள பழக்கடைகளில் சோதனை நடத்தினர். இதே போல் உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம், சுகாதார ஆய்வாளர் கல்யாணசுந்தரம் தலைமையிலான குழுவினர் நெல்லை சந்திப்பு பஸ்நிலைய பகுதியில் உள்ள பழக்கடைகளிலும், சுகாதார ஆய்வாளர் அரசுகுமார் தலைமையிலான குழுவினர் டவுண் பகுதியில் உள்ள பழக்கடைகளிலும் சோதனை செய்தனர். பறிமுதல் இந்த ஆய்வின்போது மெழுகு தடவிய 120 கிலோ ஆப்பிள் பழங்கள் மற்றும் பவுடர் தடவிய திராட்சை பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கரும்பு சாறு கடைகளில் தண்ணீரில் சாக்ரீம் பொடி கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.21 ஆயிரமாகும். பறிமுதல் செய்யப்பட்ட பழங்கள் உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் முன்னிலையில் கிருமி நாசினி மூலம் அழிக்கப்பட்டு லாரி மூலம் மாநகராட்சி உரக்கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டன. உணவு கலப்பட தடை சட்டத்தின் கீழ் இத்தகைய சுகாதார கேட்டை ஏற்படுத்தும் பழங்களை விற்பது தெரியவந்தால் அந்த விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என மாநகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். http://www.dailythanthi.com/article.asp?NewsID=557613&disdate=4/3/2010&advt=2 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |