Posted by Haja Mohideen
(Hajas) on 5/28/2010
|
|||
அனந்தபுரி ரயில் தொடர்ந்து வள்ளயூரில் நின்று செல்ல கோரிக்கை
சென்னையிலிருந் து தினசரி மாலை 07.15 மணிக்கு பறப்பட்டு திருநெல்வேலி வள்ளியூர் வழியாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரம் சென்று வருகிறது. இந்த ரயிலில் வள்ளியூரிலிருந் து சென்னைக்கு செல்வதற்கு இரண்டு படுக்கை வசதிகள் ஏர்வாடி வளர்ச்சி மன்றத்தின் முயற்சியால் பெறப்பட்டுள்ளது. சென்னையிலிருந் து திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி செல்லும் வ.எண் 2633 கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வள்ளியூர் வழியாக சென்றாலும் அது அதிகாலை 5.30 மணிக்கு வள்ளியூர் வருவதால் சென்னையிலிருந் து வரும் பயணிகள் அனந்தபுரி ரயிலில் அதிகமாக விரும்பி பயணம் செய்து வருகிறார்கள் காரணம் அனந்தபுரி ரயில் காலை 8மணி அளவிற்கு வள்ளியூர் வருகிறது. எனவே இது பொது மக்களுக்கு மிகவும் வசதியான ரயிலாக கருதப்படுகிறது.
இந்நிலையில் மேற்படி ரயில் ஜுலை 1ம் தேதியிலிருந்து வள்ளியூர் ரயில் நிலையத்தில் இருமார்க்கத்திலும் நின்று செல்லாது என்று தெரியவருகிறது. ஆன்லைன் மூலமாக ஜுலை 1ம் தேதிக்கு பின் டிக்கெட் முன்பதிவு செய்த போது இது உறுதி செய்யப்;பட்டது. ஆனால் வள்ளியூர் ரயில் நிலையத்திற்கு முறைப்படி எவ்வித தகவல்களும் வரவில்லை. ஜுலை 1ம் தேதியிலிருந்து சென்னை எக்மோர் அனந்தபுரி ரயில் 6123ஃ6124 என்ற நம்பருக்கு பதிலாக 6723ஃ6724 என்ற நம்பரில் இயக்கப்படுவதாகவும், ஏற்கனவே நின்று சென்ற மதுராந்தகம,; மேல்மருவத்தூh,; திண்டிவனம், கடம்ப+ர், வள்ளியூர், நெய்யாற்றங்கரா, ஆகிய ரயில் நிலையங்களில் இனி நிற்காது எனவும், ஆன்லைன் மூலம் தெரியவருகிறது. இந்த 6 ரயில் நிலையங்களில் வள்ளியூர் தவிர மற்ற ரயில் நிலையங்கள்; இடைப்பட்ட காலத்தில் நின்று செல்ல அனுமதிக்கப்பட் ட ரயில் நிலையங்கள் (ளூயனழற ரயில் நிலையங்கள்). ஆனால் அனந்தபுரி ரயில் வள்ளியூர் ரயில் நிலையத்தில் அறிமுகமான நாளிலிருந்து நின்று சென்று வருகிறது. அதற்கு இரண்டு படுக்கை வசதியும் உண்டு. தற்போது 6 ரயில் நிலையங்களில் நிற்காது என்றாலும் இரு மார்க்கத்திலும் அது சென்றடையும் நேரத்தில் எவ்வித மாறுதலும் இல்லை என்பது குறிப்பிடத்தக் கது
ஏற்கனவே, தகவலின் அடிப்படையில் இது சம்பந்தமாக 04.02.2010 அன்று வள்ளியூர் ரயில் நிலையத்தில் இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.அப்பாவு அவர்கள் திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளரை சந்தித்து கேட்டபோது அப்படி எந்த மாற்றமும் இல்லை என்று கூறப்பட்டது.
இனி அனந்தபுரி ரயில் வள்ளியூரில் நிற்கப்போவதில் லை என்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளது. இது சம்பந்தமாக மக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராhட்டங்கள் நடத்தவும் தயாராக இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. வள்ளியூர் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டாரத் தின் முக்கியத்துவத் தை கருதி வள்ளியூரில்; நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்ட நிலையில் ஏற்கனவே ஒடிக்கொண்டிருக் கும் ரயிலை நிறுத்துவது மிகவும் வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
அண்ணாவி MAS உதுமான் செயலாளர் ஏர்வாடி வளர்ச்சி மன்றம் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |