Posted by S.i.sulthan
(sisulthan) on 8/13/2010
|
|||
ஏர்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டட பணிகள் மந்தம் வள்ளியூர், ஆக. 11: ஏர்வாடியில் கட்டப்பட்டுவரும் அரசு ஆரம்பசுகாதார நிலைய கட்டுமானப்பணிகளில் மந்தநிலை உள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஏர்வாடியில் அரசு ஆரம்பசுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் கண்காணிப்பில் ஏர்வாடி, எல்.என்.எஸ்.புரம், தளவாய்புரம், கோதைசேரி, கடம்போடுவாழ்வு, வன்னியன்குடியிருப்பு, கட்டளை, டோனாவூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள், ஏர்வாடி அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் முன்னாள் ஊராட்சித் தலைவி அகம்மது அம்மாள் ஏர்வாடி-திருக்குறுங்குடி சாலையில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் 50 சென்ட் நிலத்தை ஒடுக்கீடு செய்தார். இந் நிலத்தில் புதிதாக கட்டடம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து ஓராண்டிற்கு முன்னர் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், கட்டுமானப்பணிகள் மந்தமாக நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. ஆனால், பணிகள் தொடங்கப்பட்டு 4 மாதங்களே ஆன நிலையில், 80 சதமான பணிகள் முடிந்து விட்டதாகவும், திட்டமிட்டபடி பணிகள் விரைவில் நிறைவுபெறும் என்கின்றனர் சுகாதாரத்துறையினர். இந்நிலையில், திருக்குறுங்குடி செல்லும் வழியில் அரசு ஆரம்பசுகாதார நிலையத்திற்கான கட்டடம் கட்டுவதற்கு, ஏர்வாடியில் உள்ள பெரும்பாலான மக்கள் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ஏர்வாடி அரசு ஆரம்பசுகாதார நிலைய கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்க உரியவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுநல ஆர்வலர்களின் விருப்பம் . |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |