Posted by Haja Mohideen
(Hajas) on 9/26/2010
|
|||
பணகுடி அருகேகாற்றாலையில் தீ பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2010,03:45 IST பணகுடி:பணகுடி அருகே 500 கிலோ மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீப்பிடித்து எரிந்தது.கன்னியாகுமரி, நெல்லை மாவட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான காற்றாலைகள் அமைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. காற்று வீசும் திசை, வேகம் மற்றும் அதன் தன்மை ஆகியவை குறித்து நிபுணர்களால் தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கேற்ற அடிப்படையில் காற்றாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. காற்றாலைகள் அமைந்துள்ள இடங்களில் காற்றழுத்த மண்டலத்தின் அளவில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவது உண்டு. இதனால் சில சமயங்களில் காற்றாலைகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் ஏற்படும்.ஒரு சில நிறுவனங்கள் தொழில் போட்டியின் காரணமாக தரமில்லாத வகையில் காற்றாலைகளை அமைக்கின்றன. அதிக அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தொழில் நுட்பத்திறனை சரிவர பயண்படுத்துவதில்லை. இதனால் மின்உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுத்துவதுடன், குறுகிய கால இடைவெளியில் காற்றாலைகள் செயல்படுவதும் இல்லை.இதுபோன்ற காரணங்களால் பணகுடி பகுதியில் காற்றாலைகள் செயல் இழந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பணகுடி அருகேயுள்ள வடக்கு வேப்பிலான்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவன காற்றாலை தொழில் நுட்ப கோளாறு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த காற்றாலை 500 கிலோ மெகாவாட் திறன் கொண்டது.இதையடுத்து அப்பகுதியில் உள்ள காற்றாலைகள் இயக்குவது நிறுத்தப்பட்டது. மேலும் இப்பகுதியில் உள்ள காற்றாலைகளில் தொழில்நுட்ப திறனை ஆய்வு செய்ய காற்றாலை நிறுவன அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். இதுதொடர்பாக மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |