Posted by S Peer Mohamed
(peer) on 10/10/2010
|
|||
எல்லாப்புகழும் இறைவனுக்கே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஏர்வாடி பொது ஜமாத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கு தாங்கள் முயற்சிகள் செய்து வருவதாக அறிகிறேன், மிக்க மகிழ்ச்சி. தாங்கள் எடுக்கும் முயற்சி இறைவன் அருளால் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ஏர்வாடி பொது ஜமாத் 1978ம் வருடம் நமது ஊரில் இரு சமுதாயத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் தொடங்கப்பட்டது. அந்த பிரச்சனையில் நமது சமுதாயத்தை சேர்ந்தவர்களில் சிலரின் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதையும,; வழக்கு மன்றத்திற்கு பல வருடங்கள் அவர்கள் அலைந்ததையும் அதில் நான் ஒருவன் என்பதையும் அதன் காரணமாக அரசு பணியில் மீண்டும் சேர்வதற்கு எனக்கு வாய்ப்புகள் இருந்தும் அந்த வாய்பை இழந்தவன்; என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இருப்பினும் உங்களுடைய ஆதரவாலும், ஒத்துழைப்பாலும், இறைவன் அருளாளும் நான் நல்ல நிலையில் இருக்கின்றேன். அனைத்து சமுதாய மக்களும் மதிக்கும் வகையில் வாழ்ந்து வருகிறேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே 1978 வருடத்திலிருந்து ஏர்வாடி பொது ஜமாத்திற்கு பல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுடைய நிர்வாகத்தில் பொது ஜமாத் சிறப்பாக செயல்பட்டு வந்தது. ஆனால் அல்ஹாஜ்.ளுஆ.ஜாலாலுதீன் அவர்களிடம் தலைவர் பதவி திணிக்கப்பட்டு சில நிபந்தனையின் அடிப்படையில் அவர்கள் பொது ஜமாஅத் தலைவராக பதவியேற்றார். அவர்கள் பதவியேற்றப்பின் முறைப்படி மாவட்ட பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. சிறந்த நிர்வாகி, எல்லோரையும் அரவனைத்து செல்வார்கள். சமுதாய மக்களிடையை ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொண்டு தீர்த்து வைப்பார்கள் என்று நாம் நம்பினோம். ஆனால் அவர்களின் செயல்பாடுகள் நாம் எதிர்பார்த்தபடி அமையவில்லை.. ஏர்வாடி கீழ முஹல்லாஹ் பள்ளிவாசல் முடக்கப்பட்டபோது நிர்ப்பந்தத்தால் தலையிடாமல் அவர்கள் ஒதுங்கியதால் தற்போதிய தலைவர்; ஜனாப் து.முகம்மது இப்ராஹிம் அவர்கள் தலைமையில், கீழ முஹல்லாஹ் பள்ளி வாசல் மீட்கப்பட்டது. எல்லாப்புகழும் இறைவனுக்கே. எனவே, ஜனாப் து.முகம்மது இப்ராஹிம் அவர்கள் பிரச்சனையின் அடிப்படையில் பொது கருத்தின் மூலம் பொது ஜமாஅத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது தாங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெற வேண்டுமானால் முதலில் சில அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். ஏர்வாடியில் உள்ள சில முஹல்லாக்களில் ஜமாஅத்; முறைப்படி செயல்படவில்லை. அதற்கு முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுகுழுவும், செயற்குழுவும் இல்லை. சில முஹல்லாக்கள்; கருத்து வேறுபாடுகளுடன் செயல்பட்டு வருகிறது. எனவே அடிப்படை சரியாக இல்லை. அடிப்படை இல்லா கட்டிடம் நிலைக்காது. ஒவ்வொரு முஹல்லாவும் 10 உறுப்பினர்கள் கொண்ட பட்டியலில் தரவும் அதன் அடிப்படையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கும் ஏற்பாடு செய்து வருகிறீர்கள். ஆனால் அந்த பட்டியல் முஹல்லாஹ் முத்தவல்லிகளின் விறுப்பு, வெறுப்புகளுடன் தயாரிக்கப்பட்டவையாகும். முறைப்படி பொது கருத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவை அல்ல என்பது பொதுவான கருத்து. தாங்கள் புதிய நிர்வாகிகளை பொது ஜமாஅத்திற்கு தேர்ந்தெடுப்பதற்கு முன்பு மேற்கண்ட அடிப்படை பிரச்சனைகளை முதலில் களைய வேண்டும், அதன் மூலம் நல்ல அடிப்படையுடன் கூடிய பொது ஜமாஅத் அமைய வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. இதில் அவசரம் காட்டவேண்டாம். மேலும், பொது ஜமாஅத் தலைவரை தேர்ந்தெடுக்கும் போது கீழ்;கண்ட தகுதிகள் நிர்ணகிக்கப்பட்டால் பொது ஜமாஅத் சிறப்பாக அமையும், நிலைத்து நிற்கும் என்பது பொதுவான கருத்து.
1. தலைவர் பதவி திணிக்கப்பட கூடாது. 2. பொது கருத்து அடிப்படையில் இருக்க வேண்டும் அல்லது தேர்தல் நடத்தப்பட வேண்டும் 3. சுன்னத்துவல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் 5 நேர தொழுகையாளியாக இருக்கவேண்டும். 4. முழு நேர பணி செய்பவராக இருக்க வேண்டும். 5. ஓரளவாவது மக்கள் பணியில் ஈடுபட்டவராக இருக்க வெண்டும். 6. ஓரளவு பொருளாதார வசதி கொண்டவராக இருக்க வேண்டும். 7. சாமானிய மக்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்பவராக இருக்க வேண்டும். 8. மத்திய, மாநில் அரசுகளையும் அதன் அதிகாரிகளையும் பிரச்சனையின் அடிப்படையில் சந்திக்கும் ஆற்றல் உள்ளவராக இருக்க வேண்டும். 9. உறுதியானவராகவும் எந்த நிர்பந்தத்திற்கும் அடிபணியாதவராகவும் இருக்க வேண்டும் 10. அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள் பதவி ஏற்றதும் பொருப்பை விட்டு விலக வேண்டும்.
வஸ்ஸலாம்
இங்ஙனம், அண்ணாவி MAS உதுமான் நாள் : 08.10.2010 செயலாளர், ஏர்வாடி வளர்ச்சி மன்றம், |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |