Posted by Haja Mohideen
(Hajas) on 11/2/2010
|
|||
நெல்லை மாவட்டத்தில் வீணாகும் நீரை சேமிக்க9 தடுப்பணைகளுக்கு ரூ.5.22 கோடி ஒதுக்கீடு
நவம்பர் 03,2010,02:33 IST திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் வீணாகும் நீரை சேமிக்க 9 தடுப்பணைகளுககு 5.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து கலெக்டர் ஜெயராமன் தெரிவித்ததாவது:நெல்லை மாவட்டத்தில் செயற்கை முறையில் நிலத்தடி நீரை செறிவூட்டும் பொருட்டு நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் ஆறுகள், சிற்றாறுகள் மற்றும் நீரோடைகளில் பயன்படுத்தபடாமல் வீணாகும் நீரினை தடுப்பணைகள் கட்டி சேமிக்கப்படுகிறது.இதனை ஆண்டு முழுவதும் வேளாண்மை மற்றும் குடிநீர் வசதிக்கு பயன்படுத்துவதற்கு ஏதுவாக 2010-11ம் ஆண்டில் நீர் வள ஆதார துறையின் கீழ் பல்வேறு ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட 522.34 லட்சம் நெல்லை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவநல்லூர் கிராமத்தில் கட்டளைகாடுவெட்டி அணைக்கட்டுக்கு மேல் பகுதியில் பச்சையாற்றின் குறுக்கில், ஆழ்வார்குறிச்சி காக்கநல்லூர் அணைக்கட்டுக்கு மேல் பகுதியில் கடனா ஆற்றின் குறுக்கில், வயலி கிராமத்தின் சுப்புலாபுரம் சிற்றூரில் காக்கநதியின் குறுக்கில் தடுப்பணைகள் கட்டப்படுகிறது.செங்குளம் கிராமத்தில் தமிழாகுறிச்சி அணைக்கட்டுக்கு கீழ் பச்சையாற்றின் குறுக்கே தடுப்பணை எண் 1 அமைத்தல், பருவக்குடி கிராமத்தில் காரிசாத்தான் ஓடையின் குறுக்கில், கரிவலம்வந்தநல்லூரில் நிட்சேப நதியின் குறுக்கில், ரவணசமுத்திரம் கிராமத்தில் ராமநதி ஆற்றின் குறுக்கில், பள்ளகால் கிராமத்தில் கடனா ஆற்றின் குறுக்கில், பனஞ்சாடி கிராமத்தில் கடனா ஆற்றின் குறுக்கில் தடுப்பணைகள் அமைக்கப்படுகிறது.இவ்வாறு கலெக்டர் ஜெயராமன் தெரிவித்தார். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |