Posted by Haja Mohideen
(Hajas) on 11/7/2010
|
|||
கந்து வட்டிக்காரர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிர்வாக குழு கூட்டம் நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு, சங்க தலைவர் கே.முகமது ïசுப் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட வர்த்தக சங்க தலைவர் ஏ.எஸ்.முத்துகுமாரசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:- போலி விளம்பரங்கள் போலியான விளம்பரங்களை வெளியிட்டு பொதுமக்களை ஏமாற்றி வணிகம் செய்யும் நிறுவனங்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் சாகுபடியை பாதுகாக்கவும், நோய்கள் பரவாமல் தடுக்கவும் கால்வாய்கள், குளங்களை அரசு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை எளிய மக்களையும், நடுத்தர வணிகர்களையும் கசக்கி பிழியும் கந்து வட்டிக்காரர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு வணிகர்களை பாதிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை அரசு தடை செய்ய வேண்டும். விலை உயர்வு அதிகரிக்க காரணமான ஆன்லைன் வர்த்தகம், சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகியவற்றை அரசு தடை செய்ய வேண்டும். மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. யார்-யார்? கூட்டத்தில், சங்க பொருளாளர் ராஜேந்திரன், செயலாளர் கே.ரவிக்குமார், துணைத்தலைவர்கள் எஸ்.எஸ்.முத்துவன்னியர், ஏ.எஸ்.மணிப்பிள்ளை, பி.சாகுல்அமீது, துணைச்செயலாளர் ஏ.ராமசுப்பிரமணியன், எம்.எஸ்.கான்முகமது, எம்.சண்முகசுந்தரம், நிர்வாக குழு உறுப்பினர்கள் பி.மகாராஜன், ஆர்.வீரமணி, எம்.பாண்டியன், எஸ்.அனிபா, சி.அருள்தாஸ், கே.செல்லத்துரை, கே.வீரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், எம்.எஸ்.கான்முகமது நன்றி கூறினார். http://www.dailythanthi.com/article.asp?NewsID=605525&disdate=11/8/2010&advt=2 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |