Posted by S.i.sulthan
(sisulthan) on 12/1/2010
|
|||
பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2010 ஏர்வாடி நம்பியாற்றின் குறுக்கே 3 கோடி ரூபாயில் புதிய பாலம் கட்டும் பணி நேற்று தொடங்கியது. ஏர்வாடி மெயின்ரோட்டில் நம்பியாற்றின் குறுக்கே பெரிய பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதனை இடித்துவிட்டு மாற்றாக புதிய பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறையினர் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தனர். அதன்படி ஏர்வாடி நம்பியாற்றின் குறுக்கே பாலம் கட்ட கடந்தாண்டு துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ஆனால் பாலம் கட்ட ஒப்பந்தம் எடுக்க முன்வரவில்லை. இதனால் பாலம் கட்டும் பணி காலதாமதம் ஆகிவந்தது. இந்நிலையில் மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டது. அதனால் மீண்டும் புத்துயிர் பெற்று பாலம் கட்டும் பணியின் முதற்கட்டமாக போக்குவரத்துக்கு வசதியாக மாற்றுப்பாதை அமைக்கும் பணி நேற்று துவங்கியது. நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகப்பாண்டியன், மண்டல பொறியாளர் சவுந்திரராஜன், உதவி மண்டல பொறியாளர் ஆனையப்பன், உதவி பொறியாளர் சண்முகநாதன், மாநில நீர்வள பாசன அமைப்பு ஆலோசனைக்குழு உறுப்பினர் சித்திக், ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் ரசூல்ஷா, பீர்முகம்மது, கல்வத் உட்பட பலர் கலந்து கொண்டனர். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |