Posted by Haja Mohideen
(Hajas) on 12/3/2010
|
|||
திருநெல்வேலி மாவட்டத்தில் சீனாதானா அறக்கட்டளை பைத்துல்மால் பணிகள் தீவிரம் Posted By News On December 3, 2010 @ 5:42 am In [1] திருநெல்வேலி மாவட்டத்தில் சமுதாயப்புரவலர் கீழக்கரை சீனாதானா செய்யது அப்துல் காதர் அவர்களின் சீனா தானா அறக்கட்டளை சார்பிலான பைத்துல் மால்கள் கிராமங்கள் தோரும் அமைக்கப்பட்டு வருகின்றன. சமுதாயச்சேவை செய்யும் சமுதாய ஒளிவிளக்கு செய்யது அப்துல்காதர் அவர்கள் துபாய் ஈ.டி.ஏ.குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் செய்யது சலாஹ_த்தீன் அவர்களின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பொதுவாக தமிழகத்தில் பொருளாதாரம்,கல்வி, வேலை வாய்ப்புக்களில் முன்னேற்றம் கண்டு வருகிற, முஸ்லிம்கள் நெருக்கமாக வாழ்கிற ஊர்களான கீழக்கரை காயல்பட்டணம் அதிராம்பட்டினம்,லால்பேட்டை, மேலப்பாளையம்,பள்ளப்பட்டி,முத்துப்பேட்டை, போன்ற ஊர்களின் வளர்ச்சியில் பைத்துல்மால்களின் பங்களிப்பு அபரிமிதமானது. சாதாரண வருவாய் வாழ்வு கொண்டுள்ளவர்கள் மற்றும் நடுத்தட்டுவசதி கொண்டவர்கள், பல்வேறு வகைக் காரணங்களுக்காக வட்டிக் கடன் வாங்குவதற்குத் தயக்கமே காட்டுவது இல்லை. பணம் கொடுத்து உதவ நல்ல உள்ளம் கொண்ட ஆட்களும், அமைப்புக்களும் இல்லாததால் அற்ப காரணங்களுக்காகஅல்லது தேவைகளுக்காக முஸ்லிம்கள் வட்டிக்கு கடன் வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இஸ்லாத்தில் வட்டி வாங்குவது எவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதோ அது போல வட்டி கொடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.;. ஊருக்கு ஊர் வட்டிக்கடை மார்வாடிகளின் வேலைகளை அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளும், தொடக்கக் கூட்டுறவு வங்கிகளும் கவுரமான தொழிலாகவே செய்து வருகின்றன. ஒருவரை ஒருவர் போட்டிபோட்டுக் கொண்டு “அவர்களை விட கடனுக்கான எங்களது வட்டி சதவீதம் குறைவு” என்று கூவிக்கூவி வியாபாரம் செய்கின்றனர். நாகரீகத்தின் வளர்ச்சியில் அல்லது ஒரு வகையான அபரிமிதமான வருவாயின் மதமதப்பில், தமது மணிப்பர்ஸில்; பல்வேறு நிறத்திலான கிரிடிட் கார்டுகள் துருத்திக் கொண்டிருப்பதை இளைய சமுதாயம் பெருமையாகவே காட்டிக் கொள்கிறது. எது அவசியம் எது அனாவசியம் என்று பகுத்துப்பார்த்துப் பொருட்கள் வாங்கிய நிலை மலையேறி;விட்டது. கிரிடிட் கார்டு வந்த கோலம், ஆடம்பரம் தலைவிரித்தாடுகிறது. நகரத்தின் காபி கடைகளில் கூட கிரிடிட்கார்டுகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற போர்டுகள் பளீரென மின்னுகின்றன. இதனால் ஒரு சாதாரண மேல்சட்டையே ரூபாய் மூன்றாயிரம் வரையில் வாங்குகிற தைரியம் வந்தவிட்டது. கையில் காசில்லாவிட்டாலும் பரவாயில்லை: பையில் கிரிடிட் கார்டு தான் உள்ளதே என்று கடன் வாங்கும் துணிச்சல் கொண்டு தேவையற்றதையெல்லாம் வாங்கித் தள்ளுகிறார்கள். வங்கியில் பணம் இருப்பவனாயிருந்தால் தாங்கிக் கொள்வான். ஆனால் ஒன்றுமில்லாத ஆடம்பரப்பேர்வழிகளின் பாடு பரிதாபம் தான். கிரிடிட்கார்டுகள் மூலம் பல்வேறு ஆடம்பரப் பொருட்களை வாங்கிக் குவித்து அதற்கான அசலும் வட்டியும் கட்டமுடியாமல் பரிதாபமாகத் தத்தளிப்பவர்கள் தாயகத்திலும் வெளிநாடுகளிலும் கணிசமாக உள்ளனர். கைப்பையிலேயே வட்டிக்காரனை, கந்து வட்டிக்குப் பணம் கொடுப்பவனை கிரிடிட் கார்டு வடிவில் உடன் வைத்துள்ளோம் என்பதை மறந்துவிட்டு, பாதிப்புக்கள் வந்த பின்னரே தான் உணரத் தலைப்படுகிறார்கள்.பரிதவித்து அல்லாடுகிறார்கள். அதனால் நிம்மதி இழந்தவர்களை ஏராளமாகக் கேள்விப்பட முடிகிறது. இவ்வகைக் கடன் பெற்றவர்கள் இது பாழுங்கினறு என்று தெரிந்தே விழுந்துத் தத்தளிப்பவர்கள ஆவார்கள்;. ஆடம்பரப்பிரியர்களுக்காக,அல்லதுஆனந்தப்பேர்வழிகளுக்காக பைத்துல்மால்கள்; ஏற்படுத்தப்படவில்லை.அவை சாமான்ய மக்களுக்காகவே தான். சீனாதானா அறக்கட்டளை மூலம் பல்வேறு ஊர்களில் பைத்துல்மால் அமைப்புக்கள் ஏற்படுத்தப்;பட்டுள்ளது.. குறிப்பாக திருநெல்;வேலி மாவட்டம் தென்காசி வட்;டத்தில் தென்காசி நடுப்பேட்டை ஜூம்ஆ பள்ளிவாசல்,புதுமனை ஜூம்ஆ பள்ளிவாசல், கிதுரு ஒலி தைக்கா ஜூம்ஆ பள்ளிவாசல், .செங்கோட்டை தஞ்சாவ+ர் ஜமாஅத் ஜூம்ஆ பள்ளிவாசல்.,வீராணம் ஜூம்ஆ பள்ளிவாசல்,திருநெல்வேலி வட்டத்தில் மேலப்பாளையம் போன்றவற்றில் பைத்துல் மால்கள்; அமைக்கப்பட்டு அதன்மூலமாக பல்வேறு தரப்பினருக்கும் வட்டியில்லாக்கடன்கள்; வழங்கப்பட்டு பயனாளிகள் பலன் பெற்று வருகிறார்கள். இத்தகைய பைத்துல்மால்களில் மாணவ, மாணவியரின் படிப்பு வகைகளுக்கும், எதிர்பாராமல் ஏற்பட்டுவிட்ட அவசர மருத்துவ சிகிட்சைச்செலவுகள் போன்ற காரணங்களுக்கும்,சிறிய அளவில் தொழில் செய்ய முதலீடுகளுக்கும் பைத்துல்மால்கள் மூலம் வட்டியில்லாக்கடன்கள் வழங்கப்படுகிறது. சில ஊர்களின் பைத்துல்மால்களில் தருகிற பெருந் தொகையான வட்டியில்லாக்கடன்களுக்கு ஈடாக, அடமானமாகப் பொருட்கள் கேட்கும் முறையையும் வைத்துள்ளார்கள். அந்த வசதில்லாதவர்களிடம் ஊரிலுள்ள ஜமாஅத் தலைவர்,உறுப்;பினர் அல்லது யாராவது ஒருவர் ஜாமீன்தாரர்களாக இருந்தால் மிக எளிதாக வட்டியில்லாக் கடன் பெறுகிறார்கள். அது தர முடியாதவர்களிடம் எவ்விதமான நிபந்தனைகளுமின்றியும் கடன் வழங்குகிறார்கள். ஜமாஅத் அல்லது அதன் தலைவர் சிபாரிசின் பேரில் தரப்படுகின்ற கடன்கள்; எவ்விதமான பிரச்சினையும் இல்லாமல் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் மீண்டு வருவதையும் பார்க்க முடிகிறது. முறையான ஜமாத் நிர்வாகம் இருந்து அதன் மூலம் பணப்பட்டுவாடா நடக்கிற காரணத்தால் ஜமாத் ஐக்கியம் ஒற்றுமை பாதுகாக்கப்படுகிறது. வேலை வாய்ப்புக்கள், தாய் நாட்டில் இல்லாததால் வெளி நாடுகளுக்குச் செல்லுகிற இளைஞர்கள் தமது வீடு வாசல்களை அடமானம் வைத்து, தமது வருவாய் அனைத்தையும் வட்டிக்காரர்களுக்கு கொடுத்துவருவதைத் தடுக்கவும்;, அசலும் வட்டியும் கட்ட முடியாமல் வீடுவாசல் நகை நட்டுக்களை இழக்கிற கொடுமையிலிருந்து பாதுகாக்கவும்,விமான டிக்கட் ,விசா போன்றவை பெறும் வகைக்கும் பல்வேறு ஊர்களிலுள்ள பைத்துல்மால்கள் கடன் கொடுத்து உதவுகின்றன. மேலும் தமிழகத்தின் எந்த ஜமாஅத்தில் பைத்துல்மால் துவக்கிட எற்பாடு செய்தாலும் சீனாதானா செய்யது அப்துல் காதர் அவர்கள் தலைவராக இருக்கும் (SEED)சீட் டிரஸ்ட்டின் சார்பாக ரூபாய் பத்தாயிரம் தரப்படுகிறது இதை மூலதனத்தோடு சேர்த்து வைக்கலாம்.ஜக்காத் கொடுப்பவர்களிடமிருந்து அவற்றை வசூல் செய்தும், குர்பானி தோல் வகைகளை விற்று கிடைக்கும் பணத்தையும் ஜமாத்துக்களின் முதலீடாக சேர்த்துக் கொள்ளலாம். இவற்றின் மூலம் சமுதாயத்தில் நலிந்தவர்களுக்கு உதவ வேண்டும்.அது தான் பைத்துல்மால்களின் குறிக்கோள்களாகும். சமுதாயப்புரவலர் கீழக்கரை சீனாதானா செய்யது அப்துல் காதர் அவர்களின் இவ்வகைப் பணிகளுக்கு தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன் அவர்கள்,பொதுச் செயலாளர் காயல் அபுபக்கர்,வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான,; சீட் டிரஸ்ட் மேலாண்மை இயக்குநர்; சமுதாயப் பிரமுகர் ஹிதாயத்துல்லா போன்ற பெருமக்கள் பக்கபலமாக இருந்துவருகிறார்கள். இம்மாதிரி பைத்துல் மால்கள் போன்று சமுதாயத்தின் பல்வேறு தொழிலதிபர்களும். ஜமாத்துக்களும் தன்னார்வ அமைப்புகளும் இதனை சமுதாயத் தேவையாகக் கருதிச் செய்ய வேண்டும். பைத்துல்மால்கள் அமைத்திட முஸ்லிம் லீக் முன்னணியினர் ஒவ்வொரு ஜமாத்திலும் முயற்சிக்கவேண்டும். முஸ்லிம் லீகின் சார்பாக அமைக்கப்பட உள்ள பைத்துல்மாலுக்கு ரூபாய் பத்து லட்சம் மூலதனமாக வழங்கப்படும்என்ற முஸ்லிம் லீகின் சமுதாய ஒளிவிளக்கு விருது பெற்ற கீழக்கரை சீனாதானா செய்யது அப்துல் காதர் அவர்கள் மேலப்பாளயத்தில நடந்த சமுதாய ஒற்றுமை மாநாட்டில் அறிவித்து அதை நடைமுறைப்படது;துவதென்பது குறிப்பிடத்தக்கதாகும். பைத்துல்மால்கள் என்பவை சமுதாயத்தை இணைக்கும் அன்புச்சங்கிலியாக இருக்கும்.ஒற்றுமையைப் பாதுகாக்கும். நம்மை அரவணைத்து அழகும் பார்க்கும். புதியதோர் உலகம் செய்வோம். கெட்டவட்டிக்கடன் தொல்லையெனும் கொடுமையிலிருந்து சமுதாய மக்களைக் காப்போம். மேலப்பாளையம் எல்.கே.எஸ்.மீரான் முகைதீன் 9843064664 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |