Posted by S.i.sulthan
(sisulthan) on 12/4/2010
|
|||
""வக்பு வாரியத்தின் மூலம் கட்டப்படும் மருத்துவ கல்லூரி, வரும் 2012ம் ஆண்டு முதல் செயல்பட துவங்கும், '' என, தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவர் அப்துல்ரகுமான் தெரிவித்தார். அவர், மேலும் கூறியதாவது: தமிழ்நாடு வக்பு வாரியமும், நீடூர் மிஸ்பாசூ சூதா மதராசாவும் இணைந்து மருத்துவ கல்லூரி கட்டுவதற்கு முடிவுச் செய்துள்ளோம். மயிலாடுதுறை அருகேயுள்ள நீடூரில், மருத்துவ கல்லூரி அமைகிறது. நீடூர் மிஸ்பாசூ சூதா மதராசா நிர்வாகம், தங்கள் வக்பு வாரிய நிலத்தில் இருந்து 23 ஏக்கர் நிலத்தை, மருத்துவ கல்லூரி கட்ட அளிக்கவுள்ளது. மருத்துவ கல்லூரியை கட்ட 60 கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது. அறக்கட்டளை மூலமாக, இக்கல்லூரி நடத்தப்படும். ஒரு உறுப்பினர் கட்டணம் 10 லட்சம் ரூபாய். மொத்தம் 170 பேர் வரை, தலா 10 லட்சம் தருவதாக உறுதி அளித்துள்ளனர். முதல் கட்டமாக, 100 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். மத்திய அரசிடம் இருந்து முறையாக அனுமதி பெற்று, வரும் 2012ம் ஆண்டு முதல் கல்லூரி செயல்பட துவங்கும். இவ்வாறு, அப்துல்ரகுமான் கூறினர். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |