Posted by S.mohamed Mohideen
(stmohideen) on 12/19/2010
|
|||
அஸ்ஸலாமு அலைக்கும் ஏர்வாடி முஸ்லீம்களே ... உங்களுக்கு என்ன நேர்ந்தது? இங்கு நடக்கும் அனாச்சாரத்தை எதிர்த்து குரல் கொடுப்பதற்கு ஜாஃக், த.மு.மு.க விற்கு மட்டும் தான் நன்மையை ஏவி தீமையை தடுப்பது கடமையா? மற்றவர்களின் மீது கடமையில்லையா? அனாச்சாரத்தை எதிர்க்க என் பின் வாருங்கள்? அல்லாஹ் அல்லாதவர்களுக்கு நீங்கள் பயப்படுகீறீர்களா? உங்களுக்கு இறைவன் அல்லாஹ்வா? மற்றவர்களா? அந்த ஒரு நாளை பயந்து கொள்ளுங்கள்.... தீர்ப்பெழுதுவதில் அல்லாஹ் மேலானவன். (நன்மையை ஏவி தீமையை தடுப்பதில் முந்திடுங்கள்) அல்லாஹ் அக்பர். மேற்கண்ட ஏர்வாடி த.மு.மு.க வின் முஹரம் குறு செய்தியை பார்த்தவுடன் ஜாஃக், த.மு.மு.க மட்டும் தான் அனாச்சாரத்தை எதிர்ப்பதாவும், இவர்கள் தவிர மற்றவர்கள் அனாச்சாரங்களுக்கு துணை போவதான அர்த்தத்தில் அமைந்துள்ளது. இது முதலில் கண்டிக்கத்தக்கது. ஏர்வாடி த.மு.மு.க கூட்டாளியான ஜாஃக் அவர்களை தவிர யாரையும் முஸ்லீம்களாக ஏற்று கொள்வதில்லை. தன்னை தானே முஸ்லீம் என்று பரைசாற்றிக் கொண்டு மார்க்கத்தை கூறு போட்டுக் கொண்டிருக்கும் அந்த கூட்டம் அவர்களுடன் இருக்கும், போது ஏர்வாடி முஸ்லீம்களே என ஆரம்பிக்கும் இந்த த.மு.மு.க வின் முஹரம் குறு செய்தி ஏர்வாடி ஜாஃக்கிற்கா? ஏகத்துவத்தை மட்டும் தான் பின்பற்றி வரும் இந்த இரு அமைப்புகளும் ஏன் தனித்தனியாக பிரிந்து செயல்படுகின்றன? ஏகத்துவத்தை மட்டும் தான் கொள்கை என்பதால் உடனடியாக சேர்ந்து கொள்ள வேண்டியது தானே? நாங்கள் மட்டும் தான் உண்மையான முஸ்லீம் என கூறித் தானே சுன்னத் ஜமாத்தை புறக்க்ணித்து புதிய அமைப்பை தொடங்கினீர்கள். அது ஏன் இத்தனை பிரிவுகளாக பிரிய வேண்டும். தற்போது டிஎன்டிஜே, ஜாஃக், த.மு.மு.க, பாக்கர் பிரிவு, முஹ்ம்மது அலி பிரிவு மேலும் பல பிரிவுகளாக பிரிந்து இருப்பதிலிருந்தே ஏகத்துவத்துவும் போக வேறு ஒன்றும் உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. ஏர்வாடி ஜாஃக் அமைப்பினரின் செயல்பாடுகளை வைத்து பார்த்தால் சுன்னத் ஜமாத்தை சார்ந்தவர்களை, மாற்று மதத்தை சார்ந்தவர்களாக தான் நடத்தி வருகிறார்க்ள். சுன்னத் ஜமாத்தினருடன் தொழுவதில்லை, சுன்னத் ஜமாத்தினர் வீட்டு திருமணங்களில் கலந்து கொள்வதில்லை, சுன்னத் ஜமாத்தினர் வீட்டு ஜனாசாத் தொழுகையில் கூட கலந்துக் கொள்வதில்லை, சுன்னத் ஜமாத்தினருடன் பெருநாள் கொண்டாடுவதில்லை. அப்படியிருக்க அடுத்த மதத்தினர் போல் உள்ளவர்கள் எப்படி போனால் உங்களுக்கென்ன? அப்படி தலையிடுவதற்கு உங்களுக்கு உரிமையும் இல்லை. ஏகத்துவத்தை மட்டும் தான் பின்பற்றி வரும் இவ்வகை அமைப்புகள் ஒன்றாக பெருநாள் கொண்டாடுகிறாதா? அங்கேயேம் ஒற்றுமையை காணவில்லை, ஏகத்துவத்துவமும் இல்லை, முதலில் தன் அடியில் உள்ள அசுத்தத்தை சுத்தம் செய்த பிறகு மாற்று மதத்தினர் போல் உள்ளவர்களை பற்றி பேசுவது தான் ஏற்புடையது. என் பின் வாருங்கள் என்று ஒவ்வொரு அமைப்பினரும் அழைக்கிறீர்கள். உங்களில் எவன் பின்னால் வருவது? மேலும் முஹரம் விழா கொண்டாடுபவர்கள் பேச்சிற்காவது அடுத்த வருடம் விட்டு விடுகிறோம் என்கிறார்கள். (குறைந்த காலத்தில் அதிக பிரிவுகளை கணடவர்கள் என்பதற்காக கின்னஸ் சாதனைக்கான பரிசு பெறவுள்ள)நீங்களோ மூன்று நாட்களாக தான் கொண்டாடுவோம், அதனை யாரும் கேட்க கூடாது என வாதாடுவதால் மூன்று நாட்களாக உள்ள பெருநாள் கூடிய விரைவில் உங்கள் முயற்சியால் பெருநாள் வாரமாக மாறுவதற்கான நாட்கள் வெகு தொலைவில் இல்லை. மேலும் ஓதப்படுவது வேதமாக இருந்தாலும், ஓதும் நபர் சைத்தானாக இருந்தால் யாரால் தான் ஏற்று கொள்ள முடியும். பிரிவினை வாதிகளை பற்றி திருகுர் ஆனின் ஆயத்துக்களில் சில 6:159 إِنَّ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا لَّسْتَ مِنْهُمْ فِي شَيْءٍ ۚ إِنَّمَا أَمْرُهُمْ إِلَى اللَّهِ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا كَانُوا يَفْعَلُونَ 6:159. நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான். 9:107 وَالَّذِينَ اتَّخَذُوا مَسْجِدًا ضِرَارًا وَكُفْرًا وَتَفْرِيقًا بَيْنَ الْمُؤْمِنِينَ وَإِرْصَادًا لِّمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِن قَبْلُ ۚ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَىٰ ۖ وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ 9:107. இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்: “நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை” என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான். 9:108 لَا تَقُمْ فِيهِ أَبَدًا ۚ لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَىٰ مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِ ۚ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُوا ۚ وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ 9:108. ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான். . 9:113 مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَن يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولِي قُرْبَىٰ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيمِ 9:113. முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல. எவ்வகையிலும் மத தொடர்பில்லாதவர்கள் பிற மதத்தினரை போல் நடத்தப்படுபவர்களை இதை செய், அதை செய்யாதே என கட்டளையிடுவது ஊரில் குழப்பத்தை தான் ஏற்படுத்தும். ஆகையால் இத்தகையவர்களுக்கும் பண உதவி செய்வதை நிறுத்துங்கள். அத்தோடு இஸ்லாத்திற்கு புறம்பாக செய்கைகளில் ஈடுபடுபவர்களான வீம்புக்காக முஹரம் கொண்டாடு பவர்களுக்கும், முஹரத்தை எதிர்க்கிறேன் என்ற போர்வையில் அதனை தூண்டி விடுபவர்களுக்கும் உங்கள் உதிரம் சிந்தி உழைத்த பணத்தை அனுப்பாதீர்கள். பணம் இல்லை என்றாலே அனைத்தும் தானாக நின்றுவிடும். தனிப்பட்ட நபரையோ அல்லது நபர்களையோ புண்படுத்துவதற்காக எழுதப்பட்டத்தல்ல. சிந்தியுங்கள். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |