Posted by S.mohamed Mohideen
(stmohideen) on 12/19/2010
|
|||
65 வயதுள்ள ஆறாவது தெருவை பூர்வீகமாக உடைய பாத்து கண்ணா, 5வது தெரு தெற்கு பகுதியில் திண்ணைகளில் தனது காலத்தை ஓட்டி வந்த பெண், எந்நேரமும் கறுப்பு கண்ணாடியுடன் கட்டையாக இருக்கும் அந்த கண்மா நோயின் காரணமாக உடலில் சில பகுதிகளில் புண் ஏற்பட்டுள்ளது. அதோடு சில நாட்களாக பேதியும் போனதால் அந்த பகுதி மக்களுக்கு மிகுந்த சிரம்மம் ஏற்பட்டதால் ஏர்வாடி பொது ஜமாத்தினர் தேசிய பெண்கள் முண்ணனியின் உதவியோடு சுத்தம் செய்து மெர்சி மருத்துவ மனையில் உள் நோயாளியாக சேர்க்கப்ப்ட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த பாத்து கண்மாவிற்கு சில சொந்தங்கள் உள்ள போதிலும் பாத்து கண்மாவை கவனிக்கும் அளவிற்கு பண மற்றும் உடல் பலமோ இல்லாது இருப்பதால் அவர்களிடமிருந்து எவ்வித பயனுமில்லை. ஆகையால் பாத்து கண்மாவை சம்பள ஆள் வைத்து தான் பார்க்க வேண்டிய நிலை. மேலும் தற்போதைய நிலையிலிருந்து குணமானாலும் அவர்களை பாதுகாக்க சம்பள ஆள் வைக்க வேண்டியதிருப்பதால் மாதமாதம் பராமரிப்பிற்கு சில ஆயிரங்கள் தேவைப்படும். ஆசிரம்களில் சேர்த்துவிடும் முயற்சிகளையும் ஜனாப் ஆசாத்(மரக்கடை) அவர்கள் முயற்சித்து வருகிறார்கள். பாத்து கண்மாவின் காலம் முழுக்க அவர்களை பராமரிக்க அனைவரும் உதவிடும்படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு ஜனாப் அஜீஸ் அவர்கள் தலைவர் ஏர்வாடி பொது ஜமாத் +919952090226 ஜனாப் செய்யது ஆசிரியர் அவர்கள் செயலாளர் ஏர்வாடி பொது ஜமாத் +919443117257 ஜனாப் ஆஷாத் அவர்கள் மீரான் டிம்பர் டிப்போ +919443970705 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |