Posted by Haja Mohideen
(Hajas) on 1/12/2011
|
|||
சிறுமலஞ்சி சிறப்பு சந்தையில் வாழைத்தார் விற்பனை "ஜோர்' ஜனவரி 12,2011,03:06 IST ஏர்வாடி:சிறுமலஞ்சி வாழைக்காய் மார்கெட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்கள் விற்பனை படுஜோராக நடந்தது.ஏர்வாடி அருகே சிறுமலஞ்சி என்ற திருவேங்கடநாதபுரம் உள்ளது. இங்குள்ள மார்கெட்டில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் வாழைத்தார் விற்பனை நடக்கும். இங்கு நெல்லை, குமரி, தூத்துக்குடி மற்றும் தேனி மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான வாழைதார்கள் விற்பனைக்கு வருகின்றன.
இந்த வாழை தார்களை கொள்முதல் செய்ய நெல்லை, சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், தென்காசி, சாத்தூர், கோவில்பட்டி, விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்த பல்வேறு வியபாரிகளும் வருவார்கள்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று சிறுமலஞ்சி வாழைக்காய் மார்கெட்டில் சிறப்பு சந்தை நடந்தது. இந்த சந்தைக்கு கதளி, நாடு, சக்கை, தொழுவன், கோழிக்கோடு, செந்தொழுவன், கற்பூரவள்ளி, ரோபஸ்டா உள்ளிட்ட பல்வேறு வகைகளை சேர்ந்த 20 ஆயிரம் வாழைதார்கள் விற்பனைக்கு வந்தன. கடந்த சில மாதங்களில் வந்த வாழைத்தார்களின் வரத்தைவிட அதிகளவு வாழைதார்கள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு சந்தைக்கு விற்பனைக்கு வந்தது.
இருந்தபோதிலும் கடந்த சில வாரங்களாக மந்தமாக விற்பனையாகி வந்த வாழைதார்களின் விலை சற்று முன்னேற்றம் காணப்பட்டது. குறிப்பாக 100 காய்கள் எண்ணம் கொண்ட தொழுவன் ரகங்கள் 400 ரூபாய் வரையிலும், கோழிக்கோடு ரகங்கள் 250 ரூபாய் வரையிலும், நாடு ரகங்கள் 330 ரூபாய் வரையிலும், செந்தொழுவன் தார்கள் 500 ரூபாய் வரையிலும், சக்கை தார்கள் 130 ரூபாய் அளவிலும், கற்பூரவள்ளி ரகங்கள் 170 ரூபாய் வரையிலும், கதளி தார்கள் 70 ரூபாய் வரையிலும் விற்பனையாகியது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ""கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை விட வாழைத்தார்கள் விற்பனை விலை சற்று உயர்ந்துள்ளது. இருந்தபோதிலும் விவசாய செலவு அதிகமாக இருப்பதால் தற்போது விற்பனையாகும் விலை விவசாயிகளுக்கு நஷ்டம்தான்'' என்றனர்.பொங்கல் சிறப்பு சந்தையை முன்னிட்டு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைதார்கள் சந்தைக்கு வந்தததால் சந்தையில் வாழைதார்களும், அதனை விற்பனைக்கு கொண்டுவந்த விவசாயிகளும், கொள்முதல் செய்யவந்த வியாபாரிகள் அதிகளவு காணப்பட்டதால் சந்தை பகுதி திருவிழா போன்று காட்சியளித்தது.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |