Posted by Haja Mohideen
(Hajas) on 1/14/2011
|
|||
பெற்ற பிள்ளையிருந்தும் நடுத்தெருவில் அனாதை பிணமாக கிடந்த தொழிலதிபர் ஜனவரி 14,2011,23:31 IST சென்னை: நிர்கதியாக விடப்பட்ட முன்னாள் ரியல் எஸ்டேட் அதிபர், சாலையில் அனாதை பிணமானார். பல லட்சம் ரூபாய் கடன் காரணமாக, மகன் மற்றும் உறவினர்கள், அவரின் உடலை வாங்க மறுத்ததால், தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், தொழிலதிபர் உடலை அடக்கம் செய்ய, திருவான்மியூர் போலீசார் முயற்சித்து வருகின்றனர்.
சென்னை மேற்குமாம்பலம், ஆர்.கே.புரம், இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ரகு(53). இவரது மனைவி லட்சுமி. குடும்ப பிரச்னை காரணமாக, லட்சுமி கணவரை பிரிந்து மும்பையில் உள்ள மகளுடன் வசித்து வருகிறார். ரகுவின் தாய் சரஸ்வதி, சகோதரி ராதா, மகன் வினய்(22) ஆகியோர், திருவான்மியூர், மாலாபி அவென்யூவில் வசித்து வருகின்றனர். வினய் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ரகு முன்பு ரியல் எஸ்டேட் தொழில் பார்த்துவந்தார். அதில் ஏற்பட்ட பலத்த நஷ்டம் காரணமாக, 27 லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டது. வீடுகட்ட பணம் கொடுத்தவர்கள் தொடுத்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., பிரிவில் நிலுவையில் உள்ளது.
சொத்து, பணம் ஆகியவற்றை இழந்ததால், குடும்பத்தினரால் தள்ளி வைக்கப்பட்ட ரகு, அனாதையாக திருவான்மியூர் வடக்கு மாட வீதி சாலையில் திரிந்தார். அவருக்கு, கடந்த 10ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், குளக்கரை சாலையில் மயங்கி விழுந்தார். அருகில் இருந்த பொதுமக்கள் 108 க்கு போன் செய்தனர். ஆம்புலன்ஸ் மூலம் அவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள டாக்டர்கள், ரகு அனாதை என்பதால், சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து, மீண்டும் குளக்கரை பகுதியில் இறக்கிவிடப்பட்டார்.
இந்நிலையில், அவரின் உடல் நிலை மேலும் மோசமானது. ரகுவின் நிலை குறித்து, திருவான்மியூரில் உள்ள உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை. ரகுவின் நெருங்கிய நண்பரான பெருங்குடி, ரத்னமணி நகரில் வசிக்கும் ரவி என்பவர், தகவலறிந்து, மீண்டும் இலவச ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 11ம் தேதி மாலை ரகு இறந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிந்து, ரகுவின் மகன் வினயை தொடர்பு கொண்டு உடலை பெற்றுச் செல்லும் படி கூறினர். ஆனால், வினயோ," என் தந்தைக்கு எந்த சொத்தும் கிடையாது. அவருக்கு பல லட்சம் ரூபாய் கடன் தான் உள்ளது. அவரது உடலை வாங்கி அடக்கம் செய்தால், கடன் காரர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிவரும். மேலும், என் தந்தை எங்களிடம் இருந்து பிரிந்து வாழ்ந்தார். அதனால், அவரது உடலை நான் வாங்க மாட்டேன்' என மறுத்ததோடு, போலீசாருக்கு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு விலகினார். மனைவி, மகன், மகள், உறவினர்கள் இருந்தும், அனாதை பிணமாகிப்போன ரகுவின் உடலை என்ன செய்வது என தெரியாமல் போலீசார் தவித்து வருகின்றனர். அனாதை உடல்களை அடக்கம் செய்யும் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் அடக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=166257
True Falce - poombuhar,இந்தியா 2011-01-15 02:20:29 IST Report Abuse
M.A Syed Mohamed Rafeek - Dubai,ஐக்கிய அரபு நாடுகள் 2011-01-15 01:55:40 IST Report Abuse மனிதனால் படைக்கபெற்ற பணத்திற்கு இருக்கும் மதிப்பு கடவுளால் படைக்கபெற்ற மனிதனுக்கு இல்லாதது விந்தையிலும் விந்தை ..........! இந்த சூழ்நிலை மறைந்தவரின் மகனுக்கும் வராது என்பது என்ன நிச்சயம் ? விழி இருக்கும்போதே விழித்துகொள் மானிடா......! மானிடப்பிறவின் மதிப்பை அறிந்துகொள் மானிடா......!! உதிர்ந்தவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம் . M A S பண்ணை காரியமங்கலம் திருவாரூர் ஜில்லா |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |