Posted by Haja Mohideen
(Hajas) on 1/17/2011
|
|||
பொங்கல் விடுமுறை முடிந்து ஊருக்கு திரும்பிய மக்கள்: ரயில்வே ஸ்டேஷன், பஸ்ஸ்டாண்ட் திணறியது ஜனவரி 18,2011,01:24 IST திருநெல்வேலி: பொங்கல் பண்டிகை விடுமுறை நிறைவு பெற்றதையடுத்து நெல்லை ரயில்வே ஸ்டேஷன், புதிய பஸ்ஸ்டாண்ட் வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டத்தால் திக்குமுக்காடியது. பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்கள் நேற்று நிறைவடைந்தது. வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து பொங்கல் பண்டிகைக்கொண்டாட்டத்திற்கு நெல்லை மாவட்டத்திற்கு குடும்பத்துடன் வந்தவர்கள் நேற்று மாலை ஊர் திரும்பினர். நெல்லை ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன், வேய்ந்தான்குளம் புதிய பஸ்ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. நெல்லை ரயில்வே ஸ்டேஷன் நேற்று முழுவதும் பயணிகள் கூட்டத்தால் திக்குமுக்காடியது. முன்பதிவு வசதி இல்லாத கோச்களில் பயணம் செய்ய மக்கள் நீண்ட கியூக்களில் மணிக்கணக்கில் காத்துக்கிடந்தனர். ரயில்வே ஸ்டேஷனிலேயே காலை டிபன், மதிய உணவு சாப்பிட்டபடி ரயில் ஏற பலர் கியூவில் காத்திருந்தனர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வரிசையில் நின்று ரயிலில் ஏறும்படி போலீசார் அறிவுறுத்தினர். லக்கேஜ்களை வரிசையில் வைத்தபடி ரயில் ஏற பயணிகள் காத்திருந்தனர். முன்பதிவு இல்லாத கோச்களில் பலர் நெருக்கியடித்தபடி வாசலில் தொங்கியபடி பயணம் செய்தனர். ஆபத்தான நிலையில் பயணித்தவர்களை போலீசார், அதிகாரிகள் எச்சரித்தனர். எனினும் பயணிகள் கண்டுகொள்ளாமல் பயணத்தை தொடர்ந்தனர். சிறப்பு பஸ்களில் அதிகக்கூட்டம் நெல்லை புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு புறப்பட்டுச்சென்ற அரசு சிறப்பு பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. வழக்கமான பஸ்கள் தவிர நேற்று மாலை நிலவரப்படி நெல்லையில் இருந்து சென்னைக்கு 14 சிறப்புபஸ்கள், திருச்சிக்கு 6, கோயம்புத்தூருக்கு 8, திருப்பூருக்கு 6, மதுரைக்கு 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சிறப்பு பஸ்கள் இயக்கத்தை அதிகாரிகள் கண்காணித்தனர். பொது மேலாளர் முருகன் கூறும்போது, ""நெல்லை அரசுப்போக்குவரத்துக்கழகத்திற்குட்பட்ட 1,025 பஸ்களும் இயக்கப்பட்டுள்ளது. 95 மாற்றுபஸ்களும் இயங்கிவருகின்றன. தேவைக்கு ஏற்ப வெளியூர்களுக்கு சிறப்புபஸ்களை இயக்கிவருகிறோம். மக்களுக்கு சீரான போக்குவரத்துவசதியை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்றார். அரசு விரைவுப்போக்குவரத்துக்கழக பஸ்சிற்கு டிக்கட் பெற கவுன்டரை ஏராளமானோர் முற்றுகையிட்டனர். புதிய பஸ்ஸ்டாண்டில் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். நெல்லையில் இருந்து சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு சென்ற தனியார் பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |