Posted by S.mohamed Mohideen
(stmohideen) on 2/5/2011
|
|||
பிப்ரவரி 05 நாள் 2011, நமது ஊரின் ஆறாவது தெரு மிலாது அரங்கில் வைத்து நடைபெற்ற டி.வி.எஸ்.கிளட்டேன் நிறுவனத்தின் பணியாற்ற வேலை வாய்ப்பு முஹாம் டி.வி.எஸ்.நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள் திரு.ரகோத்தமன் அவர்கள் திரு.வெங்கடாச்சல பெருமாள் அவர்களும் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்தனர். மேற்கண்ட வேலை வாய்ப்பு முஹாமை திருக்குறங்குடி சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் சமூக வளர்ச்சி அலுவலர் திரு.சுப்பையா பிள்ளை அவர்களும், ஏர்வாடி முஸ்லீம் ஐக்கிய ஜமாத்தின் தலைவர் ஜனாப் அப்துல் அஜீஸ் அவர்கள் ஏர்வாடி முஸ்லீம் ஐக்கிய ஜமாத்தின் செயலாளர் ஜனாப் செய்யது வத்தியார் அவர்களும் வேலை வாய்ப்பு முஹாமில் அதிக எண்ணிக்கையில் வேலை வேண்டுவோர்/மாணவர்கள் கலந்திட அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். இதன் விளைவாக வேலை வாய்ப்பு முஹாமில் ஏர்வாடி மற்றும் ஏர்வாடி சுற்றுபுறத்தை சார்ந்த பெரும் திறளான வேலை வேண்டுவோர்/மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதுபோன்ற வேலை வாய்ப்பு முஹாம் ஏர்வாடியில் நடப்பது இதுவே முதல்முறை. ஏர்வாடியில் டி.வி.எஸ்.கிளட்டேன் நிறுவனத்தில் பணியாற்ற வேலை வாய்ப்பு முஹாம் வெற்றி கரமாக நடக்க ஏற்பாடு செய்த தந்த திருக்குறங்குடி சினிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் சமூக வளர்ச்சி அலுவலர் திரு.சுப்பையா பிள்ளை அவர்களுக்கும், ஏர்வாடி முஸ்லீம் ஐக்கிய ஜமாத்தின் தலைவர் ஜனாப் அப்துல் அஜீஸ் அவர்களுக்கும், ஏர்வாடி முஸ்லீம் ஐக்கிய ஜமாத்தின் செயலாளர் ஜனாப் செய்யது வத்தியார் அவர்களுக்கும் ஏர்வாடி பொது மக்கள் சார்பாக நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |