AP,Mohamed Ali
இந்தப் படை போதுமா, இன்னம் கொஞ்சம் வேண்டுமா? (டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)
கடந்த 36 மணி நேரம் நான் இ மெயில் பார்க்கவில்லை. இன்று மதியம்(8.2.2011) கம்ப+ட்டரை தட்டி மெயில்களை ஆராய்ந்தபோது ஆகா என்றுமில்லாத வகையில் 92 மெயில்கள வந்திருக்கின்றனவே என மகிழ்ந்தபோது என்னை அதிர்ச்சியடைய செய்தது 75 மெயில்கள். அப்படியென்ன அந்த மெயில்கள் என கேட்க உங்களுக்குத் தோன்றும். அது தான் ‘ஆகாதேர்தலும் வந்தது சகோதரர்கள் ஆரம்பித்த குடுமிப்பிடி சண்டையும் வந்தது’. அதுவும் எப்போது மனிதரில் புனிதர் என்று போற்றும் பெருமானார(ஸல்);அவர்கள் பிறந்த ரபியுல்லவல் மாதத்தில் ஆரம்பித்துள்ளது. என்பதால்? தேர்தல் வந்து விட்டதல்லவா ஆகவே ஆசையும் வந்து விட்டது. எதற்கு? கோட்டையை ஆளப்போகுறார்களா எந்த இயக்கமும் என்றா? இல்லை., இல்லை. அடுத்தவர் கோட்டை மீது ஏறுவதிற்கு யார் ஏணியாகப் போகிறார்கள் என்பதில் தான் இந்தப்போட்டி.. அதற்குள்ளாக குத்து வெட்டு ஈமான் என்ற கோட்டையினை தகர்க்க ஆரம்பித்து விட்டது. சகோதரத்துவம் என்ற பாசக்கயிறினை கெட்டியாக பிடித்துக் கொள்ளுவதிற்கு பதிலாக அந்த பாசக்கயிறினை அருத்து எறிய என்ன செய்யலாம், அதில் யார் திறமையாளர்கள் என்பதில் போட்டி போட்டுக்கொண்டு மெயில்கள் வந்தவண்ணம் உள்ளன. என்னுடைய முந்தைய கட்டுரைகளான, ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’, ‘சகோதரயுத்தம் சமுதாய தீங்கு’ போன்றவற்றில் சகோதர ஒற்றுமையின் அவசியத்தினை நான் வலியுத்தியதினை உங்களுக்கு ஞாபகத்தில் கொண்டு வருவதில் தவறில்லை என நினைக்கின்றேன். எந்த மார்க்கம் சகோதர பாசத்துடன் இருக்குமோ அதுதான் உலகில் வெற்றி பெறும். ரஸ_லல்லா காலத்திலும,; அதற்கு பின்பு வந்த கலிபாக்கள் காலங்களிலும் நமது மார்க்க வீரர்கள் திக்கெட்டும் வெற்றி வாகை சூடினார்கள். காரணம் ஏக இறை தத்துவம், இறுதி நபி என்ற உறுதி, அந்த அல் அமீனுடைய வாழ்க்கை ஹதீஸ_களாக வந்தபோது அதனை ஏற்று வாழ்க்கை நெறியினை கடைப்பிடித்த பாங்கு. ஆனால் அதனை பிற்காலத்தில் வந்த இஸ்லாமிய அரசர்களும், மற்றவர்களும் மறந்ததால் சிலுவை யுத்தம் என்ற பெயரில் 1099ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ந்தேதி கிருத்துவர்கள் ஜெருசலம் நகரில் நுழைந்து நடத்திய வங்கொடுமையில் ஏராளமான சுமார் 70000 முஸ்லிம்கள் இறந்ததாக வரலாறு சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இஸ்லாமிய ஆட்சி மளமளவென்று ஒன்றன் பின் ஒன்றாக ஐரோப்பிய கண்டத்திலும், அரேபியாவில் வீழ்ச்சியடைந்தது. இன்றும் அந்தத் தாக்கத்திலிருந்து நமது சகோதரர்கள் மீள வில்லை.
மறுபடியும் ஆப்கானிஸ்தானையும், ஈராக்கினையும் பிடிக்க அமெரிக்கா முன்னாள ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் உபயோகித்த ஆயுதம் தான் மறு சிலுவை யுத்தம். அதில் அவர்கள் அரேபிய இஸ்லாமிய சகோதரர்கள் ஒற்றுமையின்மையால் வெற்றியும் பெற்றுள்ளார்கள். இந்தியாவில் இஸ்லாமியர்களின் ஒற்றுமையினை குலைக்கவம், அவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் ஊறு விளைவிக்கும் செயல்கள் தான் ஹிந்து தீவிரவாதிகள் நடத்திய அஜ்மீர், ஹைதாராபாத், மாலேகான் போன்ற இடங்களில் நடத்திய நாசவேலைகள். ஆகவே இதுபோன்ற நேரத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டிய சமதாய சகோதர்கள் தங்களுக்குள் சிலர் அரியணையில் ஏற யார் முன்னாள் ஆதரவு கொடுப்பது என்ற விசயத்தில் குடுமிப்பிடி சண்டை போடலாமா? தேர்தல் வரும் போகும், ஆளுபவர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் எந்த நேரத்திலும் சகோதரத்துவம் நமது சமுதாயத்தில் நிலை குலையக்கூடாது. அதற்கு உதாரணமாக ஒரு நீதிக் கதையினைச் சொல்லலாம் என நினைக்கின்றேன். ஒரு ஊர் முக்கியஸ்தர் நோயாளியாக படுத்த படுக்கையாகிவிட்டார். அவருடைய மூன்று மகன்கள் அப்பா அருகில் இருந்து கவனித்து வந்தனர். அவர்கள் அப்பா எப்போது தன்னுடைய சொத்தினை தங்களுக்க பகிர்ந்து கொடுப்பார் என எதிர்பார்த்து நின்றனர். அந்த முதியவர் உயிர் போகும் நிலையில் தனது மூன்று மகன்களையம் அருகில் அழைத்தார். அப்பா தனது சொத்து விபரத்தினைத்தான் சொல்ல அழைக்கின்றார் என்று அவர்கள் மூவரும் அருகில் ஆவலுடன் சென்றனர். அப்போது அவர் தனது ஒரு கையின் விரல்களை மடித்தும், மற்றொரு கையின் விரல்களை விரித்தும் காட்டினார். அவர்களுக்கு ஒன்றும் விழங்கவில்லை. அதற்கு விளக்கம் அந்த மகன்கள் கேட்டனர். அதற்கு அந்த பெரியவர், ‘எனது ஒரு கை விரல்களை மடக்கி காட்டியது எதனைக் காட்டுகின்றது என்றால் நீங்கள் அதிகமாக பேசி வீன் வம்பு இழுத்து கெட்ட பெயர் எடுக்காதீர்கள்.. அடுத்து கை விரல்கள் விரித்து நீட்டியது எதனை குறிக்கின்றது என்றால் நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடாது பாசத்துடன் நேசக்கரம் நீட்டி அன்புடன் வாழுங்கள்’ என்றார். உங்கள் மெயில்கள் பல்வேறு உளவு நிறுவனங்களும், ஹந்துத்துவா அமைப்புகளும் கண்காணிக்கின்றனர் என்பதினை யாரும் மறக்கக் கூடாது. ஆகவே தேர்தல் நேரத்தில் சகோதரர்கள் தங்கள் வாய்ச்சொற்களை கட்டுப்படுத்தி, பல்வேறு இயக்கங்களில் உறுப்பினர்களாக இருந்தாலும் பழைய பாச உணர்வை மறவாது தற்காலிக தேர்தலுக்காக இறைவனின் நிரந்தர விருப்பமான ஒற்றுமையினை ஒரு மறக்கக்கலாமா சகோதர்களே!
Thanks to : MUDUVAI HIDAYATH www.imandubai.org www.mudukulathur.com
|