Posted by S.mohamed Mohideen
(stmohideen) on 2/20/2011
|
|||
ஏர்வாடியில் மின்வெட்டு கடந்த மூன்று தினங்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தது மூன்று மணி நேரம் மின்வெட்டு நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. ஏர்வாடியில் 18/02/2011 சனிக்கிழமை முதல் நான்கு மணி நேரம் வரை மின்சாரம் வெட்டப்படுவதோடு இடையிடையே அவ்வப்போதும் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் உதாரணத்திற்கு ஏர்வாடியில் இயங்கி வரும் ஹாலோ பிளாக் தயாரிப்பு நிறுவனத்தின் நேற்றைய ஒரு நாள் நட்டம் மட்டும் ரூ3000.00. நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் மட்டும் மின்சாரம் வெட்டப்பட்டாலே நட்டம் தான், இதில் தீடீர் தீடீரென ஏற்படும் மின் வெட்டால் அதீத நட்டம் ஏற்படுவதால் ஏர்வாடியில் செயல்பட்டு வரும் ஓரிரு நிறுவனங்களும் ஊரை விட்டு வெளியேறினால் ஏர்வாடி முன்னேற்றத்திற்கு மிக பெரும் சவாலாக அமையும். அவ்வாறு ஏற்படுவதை தடுக்க அனைவரும் பாடுபட்டால் பாதிப்பு மேற்கொண்டு ஏற்பட உள்ளதை தடுக்க முடியும். இந்த மின்வெட்டில் அரசிற்கு மட்டும் பங்கு அல்ல, அதிகாரிகளின் மெத்தனமும் இதற்கு ஒரு காரணம். ஆகவே மின்வெட்டு ஏற்படும் நேரங்களில் கீழ்கண்ட கைபேசி எண்களை தொடர்பு கொண்டு விபரங்களை ஏர்வாடியை சார்ந்த அனைவரும் கேட்கும் போது தான் ஏர்வாடியிலும் உணர்ச்சி உள்ளவர்கள் இருக்கிறோம் என்பதை உணர்ந்து அதிகாரிகள் கொஞ்சமாவது யோசிப்பார்கள். நமக்கென்ன என்று என்றும் போல் விட்டீர்கள் என்றால் நமது சந்ததிகளின் நிலை கேழிக்கையாகி விடும். ஏர்வாடி இளநிலை பொறியாளர் 9445859241 ஏர்வாடி உதவி செயற்பொறியாளர் 9445854370 செயற்பொறியாளர் வள்ளியூர் 9445854357 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |