Posted by Haja Mohideen
(Hajas) on 2/26/2011
|
|||
போலீஸ் குடியிருப்பு பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணி : பணகுடியில் பரபரப்பு பணகுடி : பணகுடி போலீஸ் குடியிருப்பு பகுதியில் கல்லூரி கட்டடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதன் பேரில் தூப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வளையம் செய்துள்ளனர். இதன் தொடர்பாக பணகுடியில் பதட்டம் நீடித்து வரும் நிலையில் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு மாவட்ட போலீஸ் நிர்வாகம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. பணகுடி போலீசாருக்கு சர்வே எண் 490ல் 81 சென்ட் நிலம் உள்ளது. இதில் 5 சென்ட் நிலத்தில் பொதுமக்களின் வசதிக்காக நூலகம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 76 சென்ட் நிலத்தில் பணகுடியில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ. மூன்று சிறப்பு எஸ்.ஐ.க்கள் மற்றும் 36 காவலர்களுக்கு குடியிருப்பு கட்டுவதற்கு 1932ல் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக இந்த குடியிருப்பு பகுதியில் 7 வீடுகள் மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது. இதை காரணம் காட்டியே போலீசார் வசதி கருதி மாற்று இடங்களில் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் பணகுடியில் கடந்த செப்டம்பர் மாதம் துவக்கப்பட்ட அரசு மனோ கலை கல்லூரி அஷ்ஷே நடுநிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டபோது காலியாக உள்ள போலீஸ் குடியிருப்பு தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் போலீஸ் மத்தியில் அச்சத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியது. இந்த இடத்தை மீட்க மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் துப்பாக்கிய ஏந்திய போலீசார் இரவு பகலாக பாதுகாப்பில் உள்ளனர். இது தொடர்பாக பணகுடியில் போலீசாருக்கும், மனோ கல்லூரி நிர்வாகத்திற்கும் இடையே பனிப்போர் உருவாகியுள்ளது. இச்சம்பவம் பணகுடியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்பு வளாகத்தை மீட்க துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வளையத்தை நீடித்து வருகின்றனர். அத்துமீறி போலீஸ் வளாகத்திற்குள் நுழைபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த மாவட்ட போலீஸ் நிர்வாகம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |