Posted by Haja Mohideen
(Hajas) on 3/25/2011
|
|||
பணகுடி பகுதியில் போலி வெளிநாட்டுவேலை வாய்ப்பு நிறுவனங்களில் போலீசார் ரெய்டு
பணகுடி: பணகுடி வட்டார பகுதிகளை சேர்ந்த 8க்கும் மேற்பட்ட போலி வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்கள் மீது ரகசிய போலீசார் ரெய்டு நடத்தினர். இதன்மூலம் சுமார் 80 லட்ச ரூபாய் அளவில் மோசடி நடந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோகத்தில் பணகுடி, வள்ளியூர், காவல்கிணறு, வடக்கன்குளம், ராதாபுரம், கூடன்குளம், ஆரல்வாய்மொழி உட்பட பல்வேறு பகுதிகளில் போலியான விளம்பரங்கள் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்பை பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியை சேர்ந்த படித்த மற்றும் ஏழை இளைஞர்களிடம் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை பெற்றுக் கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாங்கி தருவதாகவும், இலவச விசா வாங்கி தருவதாகவும் கூறி மும்பைக்கு அழைத்துச் சென்று அலைக்கழிப்பு செய்து வருகின்றனர்.குறுகிய கால இடைவெளியில் விசா வரும், வெளிநாட்டு வேலை உறுதியாக கிடைக்கும் என்று போலியான பல்வேறு நிறுவனங்கள் ராதாபுரம் தாலுகா பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.
இந்நிறுவனங்கள் ஏதாவது லைசென்ஸ் நம்பர்களை குறிப்பாக கேரளா, மும்பை போன்ற பகுதிகளை சேர்ந்த ஏஜன்சிகளின் நம்பர்களை பயன்படுத்தி பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்து அரபு நாடுகளுக்கு ஆட்கள் தேவை என்று தினசரி நாளிதழ்கள் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் செய்கின்றன. இதன் மூலம் படித்த மற்றும் இளைஞர்களை ஊக்குவித்து அவர்களின் அறியாமையை பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டு வருவதாக உள்ளூர் போலீசார் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் அனுப்பபட்டது.போலி விசாக்கள் மற்றும் போலியான நிறுவனங்கள் மூலம் அனுப்பபடும் இளைஞர்கள் மற்றும் வீட்டு வேலைக்காக அனுப்பபடும் பெண்கள் உட்பட பலர் வெளிநாட்டு மோகத்தால் ஏமாற்றப்படுகின்றனர். இதுகுறித்து பல்வேறு பொதுநல அமைப்புகள் மாவட்ட அளவிலான போலீசாருக்கு புகார் தெரிவித்ததின் பேரில் போலீசார் ராதாபுரம் தாலுகா பகுதிகளில் உள்ள அனைத்து போலி நிறுவனங்கள் நடத்தும் டிராவல்ஸ் ஏஜென்சிகள் மீது ரெய்டு நடத்தினர்.அதில் 8 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது மாவட்ட ரீதியாக குற்றப்பிரிவு சம்மதத்தோடு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியும், அவர்களது நிறுவனங்களை ரத்து செய்யவும் குடிபெயர்ப்பு அதிகாரிக்கு புகார் மனு அனுப்பபட்டுள்ளது. இதன்மூலம் 80 லட்சம் ரூபாய் அளவில் மோசடி நடந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ராதாபுரம் தாலுகா பகுதியில் நடத்தப்பட்ட இந்த ரெய்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |