Posted by S.mohamed Mohideen
(stmohideen) on 4/11/2011
|
|||
யாருக்கு உங்கள் ஓட்டு ஏர்வாடியில் 06/04/2011 அன்று வரை தேர்தலுக்காக இரண்டு பொது கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. முதலில் அதிமுக அணியின் மமக சார்பாகவும், பின்பு திமுக அணியின் தேர்தல் அறிக்கை விளக்க பொது கூட்டம் என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. மமக பொது கூட்டத்தில் திமுக தலைமையையும் அவரின் குடும்பத்தை சார்ந்த திமுக உறுப்பினர்களையும் தாக்கியும், அவர்கள் செய்ததாக பேசப்பட்டு வரும் ஊழல்களையும் பற்றி பேசிச் சென்றார்கள். ஆனால் அடுத்து நடத்தப்பட்ட திமுக அணியின் தேர்தல் அறிக்கை விளக்க பொது கூட்டத்தில் மமகாவை வறுத்து எடுத்தார்கள். கூட்டணி கட்சிகளை சார்ந்த முஸ்லீம் பிரமுகர்கள் அனைவரும் மமகாவை வறுத்ததை பயன்படுத்திக் கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகளும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மமகாவை பதம்பார்த்தார்கள். அரசியலில் வெவ்வேறு துருவங்களாக செயல்படுவது தவறில்லை. அதில் நம்மில் ஒருவரையோ அல்லது ஒரு பிரிவினைரையோ தரம் தாழ்ந்து விட்டு விடக் கூடாது. 08/04/2011 அன்று தேவநாதன் அவர்களின் கூட்டம் நடைபெற்றது. அவர் வாக்கு கேட்டவிதம் எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் அவருடனும் தமிழக முஸ்லீம்கள் மத்தியில் குழ்ப்பங்கள் ஏற்பட்டிட காரணமானவர்களில் ஒருவரான பாக்கர் அவர்கள் இருந்தார். ஆகையால் தேவநாதன் அவர்களுக்கு அது பாதகம் தான். 09/04/2011 ல் மமக பொதுக் கூட்டம் மீண்டும் நடந்தது. அதிலும் திமுகவை தான் வசை பாடினார்கள். 10/01/2011ல் தவ்ஹீத் ஜமாத் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓட்டுக் கேட்டார்களோ இல்லையோ அவர்கள் திமுகவை ஆதரிப்பதற்கான காரணங்களையும், மமகாவை தாக்கியும் தான் அனைவரும் பேசினார்கள். யாரோ ஒருவர் தெரியாமல் ஓட்டுக் கேட்டாலும் கேட்டிருக்கலாம். தமிழகத்தின் இவை இரண்டுமே பெரிய கூட்டணிகள். இந்த இரு அணிகளிலுமே இஸ்லாமிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக கடந்த தேர்தலில் அம்மா அணியில் இருந்தவர்கள் இம்முறை அய்யா அணியில் உள்ளார்கள். கடந்த தேர்தலில் அய்யா அணியில் இருந்தவர்கள் இம்முறை அம்மா அணியில் உள்ளார்கள். அதில் முஸ்லிம் லீக் விதி விலக்கு. சொந்த சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லையென்றாலும் கூட திமுக அணியிலிருந்து வெளியேறுவதில்லை என்ற ஒரே கொள்கை தான். ஆகையால் திமுக அணியில் தொடர்ந்து இருப்பதற்கு காரணங்களை கூற வேண்டிய அவசியம் இவர்களுக்கு கிடையாது. இது சரியா? அல்லது தவறா? என்பதற்கு அக்கட்சியின் வளர்ச்சி தான் சான்று. ஆனால் ஒரு காலத்தில் இஸ்லாமிய சட்டங்களை சுட்டிக் காட்டி தேர்தலேயே விட்டு ஒதுங்கியிருந்தவர்கள், ஓட்டழிப்பது கூட தவறு என்றெல்லாம் உபனியாசம் செய்து வந்த இயக்கங்கள் இம்முறை ஒன்றுக்கு ஒன்று எதிரும் புதிருமாக வெவ்வேறு கூட்டணிகளில் இணைத்துக் கொண்டு தேர்தல் களத்திலுள்ளன. அம்மா அணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதற்காக வழக்கு நடந்து கொண்டேயுள்ளது. அய்யா அணியின் ஸ்பெக்ரம் ஊழல் தொகையை சொல்ல ஆரம்பித்து முடிபதற்குள் மேல் மூச்சி கீழ் மூச்சி வாங்கிவிடும். அவ்வளவு பெரிய தொகை. இதற்காகவும் வழக்கு நடந்து வருகிறது. அரசியல்வாதிகள் விஷயத்தில் வழக்குகள் நடைபெற்றுக் கொண்டே தானிருக்கும். தீர்ப்பு மட்டும் தான் வரவே மாட்டேன் என்கிறது. அரசியல் ஊழல் என்பது மன்னிக்க முடியாதது. பதவி பிரமாணத்தின் போது மொழியும் உறுதி மொழிக்கு முற்றிலும் முரணானது. அதோடு அரசியல் ஊழல் புரிந்து வருபவர்கள் தேச துரோககிகள் தான். தெளஹீத் கட்சிகள் அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பது எதற்காக? சப்ப கிடைக்கும் என்பதற்காகவா? அல்லது நக்க கிடைக்கும் என்பதற்காகவா? சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் குர்ஆனையும், ஹ்தீஸையும் மட்டுமே பின்பற்றி வருவதாக கூறி வரும் இயக்கங்களை சார்ந்த கட்சிகள் மேற்கண்ட ஊழல் கூட்டணிகளில் இருப்பதற்கும் குர்ஆனிலிருந்தும், ஹ்தீஸிலிருந்தும் ஆதாரங்களை காட்டினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஒன்று நீங்கள் அரசியலில் மட்டும் இருங்கள். எவனோ ஒருத்தன் திண்பதை விட நீங்கள் திண்பதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சபனை இல்லை. ஆனால் சீசன் வியாபாரிகள் போல வாய்ப்பு கிடைக்கும் போது அரசியலில் நக்கவோ அல்லது சப்பவோ ஓடி விடும் நீங்கள் எந்த அடிப்படையில் ஆன்மீகம் பேசுகிறீர்களோ அல்லாஹ் அறிவான். உண்மையான இஸ்லாமிய அரசியல் கட்சிகள் என்றால் நீங்கள் தனித்தல்லவா தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். அதை விடுத்து ஊழலை மட்டுமே கொள்கையாக கொண்டுள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருப்பதற்கான காரணம் நக்கவா அல்லது சப்பவா? நக்கக கொடுக்கும் அம்மா கட்சி நரேந்திர மோடிக்கு விருந்து கொடுத்துள்ளது. சப்பக் கொடுக்கும் அய்யா கட்சி அதே நரேந்திர மோடி அரசை கலைப்பதற்காக கொண்டு வரப்படிருந்த ஓட்டெடுப்பில் மோடி ஆட்சியை இழக்காமல் இருப்பதற்காக மோடிக்கு ஆதரவாக ஓட்டழித்த கட்சி தான் அய்யா கட்சி. உணர்வுள்ள முஸ்லீம் எவனும் கோவையில் காவியுடன் காக்கியும் சேர்ந்தது செயத 19 நபர்களின் கொலையை மறக்க முடியுமா? இதை நடக்கும் போது ஒரு கட்சி ஆட்சியில் இருந்தது என்றால் மற்ற கட்சிகள் அதை வேடிக்கை தான் பார்த்துக் கொண்டு தானிருந்தன. தன்னை தானே இஸ்லாமிய இயக்கம் என்று தமிழக இஸ்லாமியர்களை துண்டு துண்டாக கூறு போட்டதற்கு தலையாய் இருந்த அந்த இயக்கம், இன்று பல துண்டாக பிரிந்து வழுயிழந்து தள்ளாடி கொண்டிருக்கிறது. இதுவரை நக்கக் கொடுக்கும் கூட்டணியில் இருந்து வந்தது. ஆனால் இம்முறை சப்பச் சென்றுள்ளது. அதற்கு அவர்கள் கூறும் காரணம், அம்மா இஸ்லாமியர்களின் இட ஓதுக்கீட்டிற்கு ஆதரவு அளிக்கவில்லை ஆதலால் அவர்களை விட்டு விட்டு சப்ப சென்றுவிட்டோம் என்கிறது. சரி இதையாவது ஏற்றுக் கொள்ளலாம். மற்ற இஸ்லாமிய இயக்கங்கள் எல்லாம் எதிர்பார்ப்புடன் தான் கூட்டணிக்கு சென்றுள்ளதாம் இவர் மட்டும் சமுதாய நன்மைக்காக மட்டும் தான் சென்றுள்ளாராம். அப்படியென்றால் பிளவுன்று கிடக்கும் இஸ்லாமிய இயக்கங்களை ஒன்றாக சேர்ந்து தேர்தல் களத்தில் இறங்கி இருக்கலாமே? ஏன் ஊழல் கூட்டணிகளிலே சேர்ந்துள்ளீர்கள்? யோக்கியன் வருகிறான் செம்பை எடுத்து மறைத்து வைத்துக் கொள்ளுங்கள் என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது. இவர் குற்றம்சாட்டும் அனைத்து இயக்கங்களும் இவரிடமிருந்து பிரிந்து உருவானவைகள் தான். "தாயை போல் தான் பிள்ளை நூலை போல் தான் சேலை". அவன் எந்த எதிர்பார்ப்புடன் கூட்டணிக்கு சென்றுள்ளானோ அதே நிலையில் தான் மக்கள் உன் கட்சியையும் பார்க்கிறார்கள். இவர்கள் கூட்டணி அமைத்திருப்பது இஸ்லாமிய சமுதாயத்திற்கு செய்யும் சேவையா? அல்லது துரோகமா? பொதுமக்களே நீங்கலே முடிவு செய்து உங்களுடைய ஓட்டை பயனுள்ளதாக போடுங்கள். இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்றை ஒன்று குறை கூற மட்டும் தான் தெரியும், நம்மை வாழ வைக்க இவர்களுக்கு தெரியாது. உதரணமாக இந்த சட்டமன்ற தேர்தல் களத்தில் முஸ்லீம் இயக்கங்கள் மட்டும் தான், எவர்களையோ வாழ வைப்பதற்காக அடுத்த இஸ்லாமிய இயக்கங்களை வசை பாடி தன்னை தானே தரம் தாழ்த்திக் கொண்டது மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த சமூதாயத்தையே தரம் தாழவும் செய்தும் விட்டன. எவ்வித இட ஒதுக்கீடும் இல்லாமல், அரசியல் கட்சிகளும் இல்லாமல், இயக்கங்கள் இல்லாமல், வாதியாகவோ அல்லது பிரதிவாதியாகவோ நீதி மன்றம் செல்லாமல் இந்தியாவில் முக்கிய துறைகளின் பொருப்புகளை தங்கள் கையில் வைத்துள்ள பிரமணர்களை நாம் ஏன் முன் உதரணமாக கொள்ளக் கூடாது? அவர்கள் கல்வியை மட்டும் கற்பிக்கிறார்கள். நம்முடைய இயக்கங்கள் பத்தாவது முடிக்கவுள்ள மாணவர்களை தங்கள் இயக்கங்களில் இணைத்துக் கொள்வதால் இயக்கங்களின் சிந்தனைகள் புகுத்தப்பட்டு கல்வி நாட்ட இல்லா நிலைக்கு சென்றுவிடுகிறார்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களை மட்டும் தான் இயக்கங்களில் சேர்ப்போம் எந்த இயக்கமாவது பிரகடணப்படுத்த தயாரா? ஊழல் அரசியல் சேர்ந்தால் தான் இட ஒதிக்கீடு கிடைக்குமென்றால் உங்களுக்கு இட ஒதிக்கீடு அளிப்பவர்கள் அரசியல் தலைவர்கள் தான் அல்லாஹ் அல்ல? கத்தி முனையில் நின்றாலும் ஈமானை இழக்க மாட்டோம் என்பதை பின்பற்றும் இயக்க கட்சிகள், யார் தலைமையிலுள்ள ஊழல் கட்சிகளுடனும், கூட்டணியிலும் இருக்கக் கூடாது. இதை ஏற்றுக் கொள்ளாத இயக்க கட்சிகள் அனைத்தும் ஊழல் (வயிற்று பிழைப்பு)கட்சிகள் தான். ஓதப்படுவது வேதமாக இருந்தாலும் வேதம் ஓதும் நபர் யார் என்பதை அறிந்து செயல்படுபவன் தான் புத்திசாலி. நாம் அனைவரும் புத்திசாலிகளாகவே இருக்க நம்மை சிருஷ்டித்து, பரிபாலித்து வரும் அல்லாஹ்வை வேண்டுகிறேன். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |