நெல்லை மாவட்டத்தில் 39போஸ்ட் ஆபீஸ்களில் மின் கட்டணம் செலுத்தும் வசதி அமல் : அதிகாரி தகவல்
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2011,01:57 IST
திருநெல்வேலி : நெல்லை பகுதி நுகர்வோர்கள் மாவட்டத்தில் உள்ள 39 கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட போஸ்ட் ஆபீஸ்களில் மின் கட்டணத்தை செலுத்தலாம் என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது; நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட நுகர்வோர்கள் மின் கட்டணத்தை மாவட்டத்தில் உள்ள 39 கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட போஸ்ட் ஆபீஸ்களில் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம்: அம்பாசமுத்திரம், பாளை., நெல்லை, களக்காடு, வள்ளியூர், ஆழ்வார்குறிச்சி, சேரன்மகாதேவி, ஏர்வாடி, கங்கை கொண்டான், ஐ.சி.பேட்டை, கடையம், கல்லிடைக்குறிச்சி, கீழ ஆம்பூர், மகாராஜநகர், மானூர், மேலப்பாளையம், முக்கூடல், மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, நான்குநேரி, பணகுடி, பாபநாசம் மில்ஸ், பாப்பாக்குடி, பரப்பாடி, பெருமாள்புரம், ராதாபுரம், ரவணசமுத்திரம், சங்கர்நகர், சமுகரங்கபுரம், தச்சநல்லூர், நெல்லை கலெக்ட்ரேட், நெல்லை பேட்டை, நெல்லை டவுன், திசையன்விளை, தெற்கு கள்ளிகுளம், வடக்கன்குளம், வண்ணார்பேட்டை, வி.கே.புரம் மற்றும் வீரவநல்லூர் போஸ்ட் ஆபீஸ்களில் பணம் செலுத்தலாம். மேற்கண்ட போஸ்ட் ஆபீஸ்களில் மின் கணக்கீட்டு அட்டையை காண்பித்து மின் கட்டணத்தை பணமாக செலுத்த வேண்டும். இந்த சேவைக்காக 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்திற்குட்பட்ட நுகர்வோர்கள் மேற்கண்ட எந்த ஒரு போஸ்ட் ஆபீசிலும் மின் கட்டணத்தை செலுத்தலாம்.
7போஸ்ட் ஆபீஸ்களில் விரைவில் அமல் இதுதவிர பொட்டல்புதூர், மூன்றடைப்பு, இடையான்குடி, தெற்கு கருங்குளம், பர்க்கிட் மாநகரம், மருதகுளம், முன்னீர்பள்ளம் ஆகிய 7 போஸ்ட் ஆபீஸ்களிலும் மின் கட்டணம் செலுத்தும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த சேவையின் மூலம் மின் கட்டணம் செலுத்தி பயன் பெறலாம் இவ்வாறு நெல்லை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணியன் அறிக்கையில் கூறியுள்ளார்.
http://www.dinamalar.com/district_detail.asp?id=225693
|