Posted by Haja Mohideen
(Hajas) on 5/3/2011
|
|||
வயல்வெளிகளை வீட்டுமனைகளாக மாற்றிய ஊழல் அதிகாரிகள்! பதிவு செய்த நாள் 5/3/2011 5:38:45 PM
இதனை எதிர்த்து குமரியை சேர்ந்த ஒருவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு அரசு தரப்பில் சரியான நடவடிக்கை இன்மையால் ஐகோர்ட் இந்த உத்தரவிற்கு தடை விதித்தது. இதனையடுத்து விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறத் தொடங்கின. இதில் கடந்த 3 ஆண்டுகளில் மிகவும் வேகமாக வயல் வெளிகள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டது. இதன்விளைவாக அரசின் கணக்குப்படி குமரியில் 8ஆயிரத்து 500 ஹெக்டேர் ஆக நெல் விவசாய நிலப்பரப்பு குறைந்துள்ளது. இதற்கிடையே நெல் விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வயல் வெளிகளை வீட்டுமனைகளாக பத்திரப்பதிவு செய்ய தடை விதித்தார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஏற்கனவே முன்பணம் வழங்கிய மற்றும் பிளாட்டுகளாக அறிவிக்கப்பட்ட இடங்களை பத்திர பதிவு செய்ய அனுமதிக்கும் படியும், மீண்டும் புதிதாக விவசாய விளைநிலங்கள் அழிக்கப்படாது என உறுதி அளித்தனர். இதுதொடர்பாக தமிழக முதல்வர், அமைச்சர் சுரேஷ்ராஜன் ஆகியோரிடமும் மனுக்கள் அளித்தனர். இதன்படி ஏற்கனவே பிளாட்டாக மாற்றப்பட்ட இடங்களை மட்டும் பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் தேர்தல் அறிவிப்பு காரணமாக பத்திரப்பதிவு பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது வாக்கு எண்ணிகை முடிந்து வரும் 15ம் தேதியோடு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் வாபஸ் ஆவதால் பத்திரப்பதிவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைய தொடங்கியுள்ளன. தற்போது தமிழ்நாடு ரிஜிஸ்தர் இணையதளத்தில் வீட்டுமனைகளாக காட்டப்பட்டுள்ளவை வயல்வெளியாக உள்ளது. தற்போது இதுபற்றி கலெக்டர் நேரடியாக தலையிட்டு விசாரணை நடத்தினால் ஊழல் அதிகாரிகள் சிக்குவார்கள். விளைநிலங்களும் பாதுகாக்க வழி ஏற்படும். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |