Posted by Haja Mohideen
(Hajas) on 5/10/2011
|
|||
தேர்ச்சி பெற்றவர்கள் ஓன்லைனிலேயே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதியலாம்: அமைச்சர் தகவல் மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை பெற பள்ளிக்கு செல்லும் போது தங்களுடைய ரேஷன் கார்டை எடுத்து செல்ல வேண்டும். பதிவுதாரரின் பெயர் ரேஷன் கார்டில் இடம்பெற்றிருக்க வேண்டும். 10ம்வகுப்பு கல்வி தகுதியினை வேலைவாய்ப்பு அலுவகத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ளவர்கள், வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டையையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். தற்போது புதிதாக பதிவு செய்வோருக்கு உரிய பதிவு எண்ணும் வழங்கப்படும். பதிவுதாரர்கள் மாற்று திறனாளிகளாக இருப்பின் தங்களுடைய கல்வித்தகுதியை பள்ளியில் பதிவு செய்த பின்னர் தங்கள் முன்னுரிமையை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடந்த காலங்களில் தேர்வு முடிவு வெளியானதும், ஒரே நாளில் பல்லாயிரம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களை நாடுவதன் மூலம் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் கால விரயம் ஆகியவற்றை முழுவதுமாக தவிர்ப்பதற்காக பள்ளிகள் வாயிலாகவே ஓன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் தெரிவித்தார். http://www.newindianews.com/view.php?20KOl1dbce40644e2eMQ2022YmD3ddcfDmK30eCCAKae4C04A4cb2lOm22 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |