நெல்லையில் ஆட்டோ ஷோரூமில் பயங்கர தீவிபத்து: ரூ20 லட்சம் சேதம்!
புதன், 11 மே 2011 00:41 நாஞ்சில் ஷா Tamil Nadu
. நெல்லையில் ஆட்டோ ஷோரூமில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பாலாயின.
நெல்லை தச்சநல்லூர் புறவழிச்சாலையில் ஒரு தனியார் ஆட்டோ ஷோரூம் உள்ளது. காலை திடீரென ஷோரூமில் இருந்து புகை வந்தது. திடீரென ஷோரூம் முழுவதும் தீபிடித்து எரிந்தது. இதைப்பார்த்து பதறி போன ஊழியர்கள் ஷோரூமில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களை வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து தீ மளமளவென எரிந்ததால் பேட்டை மற்றும் சேரன்மகாதேவி இருந்து தீயணைப்பு படை வீரர்கள் வந்து தீயை மேலும் பரவவிடாமல் அணைத்தனர். இருப்பினும் ஷோருமுல் இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாயின. இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிபத்திறகான காரணத்தை விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://www.inneram.com/2011051016388/fire-in-an-auto-show-room-at-nellai-rs20-laks-loss?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+inneram+%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%29
|