Posted by Haja Mohideen
(Hajas) on 5/14/2011
|
|||
முடிவு செய்தனர் தமிழக மக்கள் சென்னை:தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சென்னை:தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்க உள்ளார். அ.தி.மு.க., கூட்டணி, 198 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், அ.தி.மு.க., மட்டும் போட்டியிட்ட, 160 தொகுதிகளில், 148ல் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. தமிழகத்தின், 14வது சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் 13ம் தேதி நடந்த தேர்தலுக்கான, ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது. இதில், ஆரம்பம் முதல், அ.தி.மு.க., கூட்டணியே பெரும்பாலான இடங் களில் முன்னணியில் இருந்தது.பெரும்பாலான, அ.தி.மு.க., கூட்டணியினர் வெற்றி முகத்தில் இருந்தனர். தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில், பெரும்பாலான அமைச்சர்கள் தோல்வியைத் தழுவினர். அதேபோல, தி.மு.க., தலைமையின் குடும்ப சிபாரிசு மூலம் சீட் வாங்கியவர்களும் தோல்வியடைந்தனர்.அ.தி.மு.க., கூட்டணியில் அக்கட்சி போட்டியிட்ட, 160 தொகுதிகளில், 148ல் அமோக வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மை பெற, 118 எம்.எல்.ஏ.,க்களே தேவை என்பதால், அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைப்பது மிக எளிதானது. தே.மு.தி.க., போட்டியிட்ட, 41 தொகுதிகளில், 29ல் வெற்றி பெற்றது. இதன் மூலம், பிரதான எதிர்க்கட்சி வாய்ப்பு, தி.மு.க.,வுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க.,வே பிரதான எதிர்க்கட்சி ஆகிறது.அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், பார்வர்டு பிளாக், கொங்கு இளைஞர் பேரவை போன்ற கட்சிகளும், பிரதான கட்சிகளை எதிர்த்து, தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றன. ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா, திருவாரூரில் கருணாநிதி, ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் அமோக வெற்றி பெற்றனர். அ.தி.மு.க., வெற்றியைத் தொடர்ந்து, அக்கட்சியினர், போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டு முன்பும், சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகம் முன்பும் குவிந்து, பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். அதே நேரத்தில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், போயஸ் கார்டனுக்கு படையெடுத்தனர். அ.தி.மு.க.,வின் வெற்றி உறுதியானது தெரிந்ததும், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை, கவர்னருக்கு, கருணாநிதி அனுப்பி வைத்தார்; அதை கவர்னர் ஏற்றுக் கொண்டார்.இந்நிலையில், அடுத்து ஆட்சி அமைக்க வருமாறு ஜெயலலிதாவுக்கு கவர்னர் பர்னாலா அழைப்பு விடுக்க உள்ளார். இதையடுத்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று நடத்தப்பட்டு, முதல்வராக ஜெயலலிதாவை தேர்வு செய்ய உள்ளனர். இதனால், ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களது பதவியேற்பு விழா, நாளை நடக்க வாய்ப்புள்ளது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |