Posted by Haja Mohideen
(Hajas) on 5/14/2011
|
|||
பதிவு செய்த நாள் 5/15/2011 3:30:37 AM புதுடெல்லி் போலி என்கவுண்டர் நடத்தும் போலீஸ் அதிகாரிகள் கொலைகாரர்கள் என்றும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மும்பை, வர்சோவா பகுதியில் உள்ள நானாநானி பார்க்கில் கடந்த சில ஆண்டுகளுக்கு வாலிபர் ஒருவரை போலீசார் சோட்டா ராஜன் கூட்டாளி என்று குற்றம்சாட்டி, போலி என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த போலி என்கவுன்டர் தொடர்பாக சிறப்பு புலனாய்வு படை விசாரித்தது. என்கவுன்டரில் சம்பந்தப்பட்ட பிரதீப் சர்மா. பிரதீப் சூர்யவன்ஷி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளை கைது செய்தது. இவர்களுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்தது. இதையடுத்து, அவர்கள் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுக்கள், நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், ‘போலி என்கவுன்டர் நடத்தும் போலீஸ் அதிகாரிகள் கொலைகாரர்கள்’ என்று கூறினர். அவர்கள் மேலும் கூறியதாவது்போலி என்கவுன்டர் நடத்தியதாக ஒரு வழக்கில் நிரூபிக்கப்பட்டால், அதை அரிதினும் அரிதான வழக்காக கருதி, அந்த அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். என்கவுன்டர்கள் என்ற பெயரில் மக்களை சுட்டுக்கொன்று விட்டு அதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று போலீசார் நினைத்தால், அவர்களுக்கு தூக்கு மேடை தயாராக இருக்கிறது. உயர் அதிகாரி உத்தரவிட்டதாக கூறி போலி என்கவுன்டரின் பின்னால் போலீசார் ஒளிந்து கொள்ளவும் முடியாது. போலி என்கவுன்டர் நடத்தும்படி உயர் அதிகாரி உத்தரவிட்டால் அந்த உத்தரவை நிறைவேற்ற மறுப்பது போலீசாரின் கடமை. அப்படி செய்யாவிட்டால் அவர்களுக்கு எதிராக கொலைக் குற்றம் சுமத்தப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படலாம் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |